உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு; பெற்றோருக்கு கோர்ட் எச்சரிக்கை

குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு; பெற்றோருக்கு கோர்ட் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பல காரணங்களுக்காக குழந்தைகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 13 பேருக்கு ஜாமின் வழங்கி, உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அடங்கிய அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:பாலியல் தொழில், பிற வேலைகள், பிச்சை எடுக்க, குற்றச் செயல்களில் ஈடுபடுத்த, தத்து கொடுக்க என, பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.தத்தெடுக்கும் நடைமுறைக்கான காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதால், குழந்தைகளை கடத்துகின்றனர். சிறுவர்களின் குற்றச் செயல்களுக்கான தண்டனை குறைவாக இருப்பதால், அதில் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறு பல காரணங்களுக்காக குழந்தைகளைக் கடத்தும் கும்பல், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால், பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும்.மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த மருத்துவமனைகளே பொறுப்பாகும். மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டால், அதன் லைசென்ஸ் நிறுத்திவைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்த குறிப்பிட்ட வழக்கில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களுக்கு ஜாமின் வழங்கிய உத்தரவை, சரியாக சிந்திக்காமல் வழங்கப்பட்டதாகவே பார்க்கிறோம். அந்த ஜாமின் ரத்து செய்யப்படுகிறது.அவர்கள் மீதான வழக்குகளை, ஆறு மாதங்களுக்குள் உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை, இரண்டு மாதங்களுக்குள் மாநில போலீஸ் கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் உத்தர பிரதேச அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யவில்லை.குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை, அந்தந்த உயர் நீதிமன்றங்கள், மிக விரைவாக விசாரிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த மருத்துவமனைகளே பொறுப்பாகும். மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டால், அதன் லைசென்ஸ் நிறுத்திவைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நீதிகுமார்
ஏப் 21, 2025 11:36

பெற்றோர்கள் எச்சரிக்கையா இருக்கணுமாம். இவிங்க ஜாமீன்ல உட்ருவாங்களாம். நீதி மன்றம், போலீஸ் எல்லாம் எதுக்கு? ஊட்டுக்குப் போங்க.


பெரிய குத்தூசி
ஏப் 21, 2025 09:04

ஓஹோ, இந்த குழந்தைகள் கடத்தல் சம்பந்தமா டீல் பண்ற ரெண்டு நீதிபதிகளும் நம்ம திருட்டு திராவிட கும்பலுக்கு ஆதரவா தீர்ப்பு சொல்லி ஜனாதிபதிக்கே உத்தரவு போட்டவங்க. திராவிடம் எத்தனை கோடி செலவுபண்ணி தீர்ப்பை வாங்குனிச்சினு கடவுளுக்கே வெளிச்சம். இவங்கள பாத்தா இந்தி கூட்டணி ஆதரவு ஆலுங்கனு நல்ல தெரியுது. சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜட்ஜ் யஸ்வந்த் வர்மா வீட்டில் நெருப்பு பிடித்து சுமார் 150 கோடி ருபாய் பணம் பாதி எரிந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணம் திராவிட கும்பலின் பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த ஜட்ஜ் யஸ்வந்த் வர்மா வும், இந்த வழக்கில் பர்தி வால வும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மஹாதேவன் சார் திமுக அனுதாபி ஆவார்கள். சமீபத்திய கவர்னர் சம்பந்தப்பட்ட தீர்ப்பில் உள்குத்து உள்ளது. பிரதமர் மோடி தான் இதை கண்டுபிடிக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 10:44

அடுத்து டிரம்ப்புக்கு கூட உத்தரவிடுவார்கள். உங்களுக்கென்ன?


அப்பாவி
ஏப் 21, 2025 07:04

ஜாமீனில் வெளியே போய் இன்னும் எத்தனை குழந்தைகளை கடத்துனாங்களோ? எதுக்குடா ஜாமீன் குடுத்தாங்க?


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 06:03

கோர்ட்டுகள் ஜாமீன் கொடுத்து குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார்களா ? ஜாமின்ல மந்திரிங்க


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 06:03

கோர்ட்டுகள் ஜாமீன் கொடுத்து குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார்களா ? ஜாமின்ல மந்திரிங்க ..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 05:23

குழந்தைகள் கடத்தல் என்பதுகளின் இறுதியில் இருந்தே அதிகரித்தது .... இதில் கொடூரமானது உறுப்பு திருடுதலுக்காக குழந்தைகள் கடத்தல் ......... உச்சம் அதைப்பற்றி பேசவே இல்லை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை