உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரீமி லேயர் வரம்பு அதிகரிப்பு மஹா., அமைச்சரவை ஒப்புதல்

கிரீமி லேயர் வரம்பு அதிகரிப்பு மஹா., அமைச்சரவை ஒப்புதல்

மும்பை,: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவில், நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி, மொத்தமுள்ள 48ல், 18ல் மட்டுமே வென்றது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி 30 இடங்களில் வென்றது.இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், மஹாராஷ்டிரா மாநில அட்டவணை ஜாதி கமிஷனுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வரைவு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே, கிரீமி லேயரில் சேர்ப்பதற்கான வருமான அளவுகோலை 8 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கு முன், கிரீமி லேயர் உச்ச வரம்பு, 6 லட்சம் ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்படி, தேர்தலில் பா.ஜ., ஹாட்ரிக் வெற்றி பெற்றது. தற்போது இதே பாணியை, 'மஹாயுதி' கூட்டணி மஹாராஷ்டிராவில் பின்பற்றி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M.R. Sampath
அக் 11, 2024 13:31

முரசொலி செல்வன் காலமானார் வருத்தமான செய்தி. முதற்கண் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களைவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா என்று உதயாநிதி ஸ்டாலின் வாய்விட்டு அழுததாக செய்தி. மிக நெகிழ்ச்சியான உணர்வு. இவ்வாறு உதயநிதி அவர்கள் உணர்ச்சி வசப்படும் பொது தன்னையும் அறியாமல் ஒரு உண்மையை வெளிப்படுத்திஉள்ளார். அதாவது தன்னுடைய மாமா என்ற பெரியவர் ஆன்மா இறக்க வில்லை, எங்கோ சென்றிருக்கிறார், எனக்குத் தெரியவில்லை என்ற உண்மை. பகவத் கீதையில் குறிப்ப்ட்ட படி ஆத்மாவுக்கு அழிவில்லை. உடல் என்கிற ஜடப் பொருளு க்கு தான் அழிவு என்ற உண்மை. இது தான் ஆன்மீகத்தின் புரிதல். தொன்றுதொட்டு காலங்களாக பற்பல அனுபவங்களாலும் , சர்ச்சைகளாலும், அனுமானங்களாலும் அறிவில் சிறந்த நம் முன்னோர்களால் விவாதிக்கப்பட்டும, விளக்கப் பட்டும் ஆன்மிகம் வளர்க்கப் பட்டுள்ளது என்பதை உதயநிதி அவர்கள் உணர்ந்து கொள்ள அவருடைய உள்ளார்ந்த ஆன்மாவின் வெளிப்பாடே உதவும் என நம்புகிறேன். சநாதனத்தை முழுமையாக புரிந்து கொண்டு , சாதி வேறுபாடு போன்ற இடையிலே அக்காலகட்டடங்களுக்கு களுக்கு ஏற்ப ஏற்பட்ட இடர்பாடுகளை சரி செய்யும் முயற்சியில் அரசும் மக்களும் ஒத்துழைத்து செயல்படவேண்டும். பாரதம் வாழ்க.


M.R. Sampath
அக் 11, 2024 11:34

கிரீமை லேயர் உச்ச வரம்பு அதிகரிப்பதால் ஏற்கனவே மேற்படி சலுகையால் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும் இதுவரை அத்தகைய ஒதுக்கீட்டு சலுகையை பயன் படுத்தாத தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்வாதாரம் உயர்வதற்கு வாய்ப்புகள் மறுக்கப்படும். சமூக நீதி/சமூக பொருளாதார சமன்பாடு ஆகிய கொள்கைகளுக்கு எதிர்மறை யாக செயல்படும். பண வீக்கத்தின் அடிப்படையில் உச்சவரம்பை உயர்த்தலாம். உச்சவரம்பை ஓரிடத்தில் நிறுத்தி மறு தணிக்கை செய்து எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட டோர் பயன் அடைந்துள்ளனர் என்பதை கணித்து பிறகு நிர்ணயிக்கப்பட வேண்டும்.


M.R. Sampath
அக் 11, 2024 11:30

கிரீமை லேயர் உச்ச வரம்பு அதிகரிப்பதால் ஏற்கனவே மேற்படி சலுகையால் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும் இதுவரை அத்தகைய ஒதுக்கீட்டு சலுகையை பயன் படுத்தாத தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்வாதாரம் உயர்வதற்கு வாய்ப்புகள் மறுக்கப்படும். சமூக நீதி/சமூக பொருளாதார சமன்பாடு ஆகிய கொள்கைகளுக்கு எதிர்மறை யாக செயல்படும். பண வீக்கத்தின் அடிப்படையில் உச்சவரம்பை உயர்த்தலாம். உச்சவரம்பை ஓரிடத்தில் நிறுத்தி மறு தணிக்கை செய்து எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட டோர் பயன் அடைந்துள்ளனர் என்பதை கணித்து பிறகு நிர்ணயிக்கப்பட வேண்டும். தன இச்சையாக தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும்.


பாமரன்
அக் 11, 2024 08:27

என்னது பாஞ்சு லட்சம் சம்பாதிச்சாலும் இட ஒதுக்கீடா... நல்லா வருவீங்க


ஆரூர் ரங்
அக் 11, 2024 08:05

மாதம் ஒன்றே கால் லட்சம் சம்பாதிப்பவர் கிரீமி லேயர்படி ஏழை? அன்றாடக் காய்ச்சிகளுக்கு துரோகம்.


M.R. Sampath
அக் 11, 2024 07:04

கிரீமி லேயர் அதிகரிப்பதன் மூலம் ஏற்கனவே பயன் பெற்ற மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதுவரையில் பயன் பெறாத தாழ்த்தப்பட்ட பெரும்பான்மையான மக்களுடைய வாய்ப்பை பாதிக்கும். இது எந்த வகையில் சமூக நீதி/சமன்பாடு ஆகும். அதிகபட்சமாக பண வீக்கம் சம்பந்தப்பட்ட அளவுக்கு கிரீமி லேயர் உயர்த்தப் பாடலாம். யோசிக்க வேண்டிய விஷயம்.


Kasimani Baskaran
அக் 11, 2024 05:18

பார்முலாவை மாற்றிப்போட்டதால் வெற்றி என்று நினைப்பது சரியல்ல. பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சேர்ந்து கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதே போல மஹாராஷ்டிராவில் உழைக்க வேண்டும்.


புதிய வீடியோ