உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் பெரும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதைத் தடுப்பதற்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதுஆந்திராவில் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ஒருவர் கடந்த 2023ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவரின் தந்தை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை ஆந்திர அரசும், ஐகோர்ட்டும் நிராகரித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவரது தந்தை வழக்கு தொடர்ந்தார்.இதனை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது,கல்வியினாலும், தேர்வு காரணமாக ஏற்படும் அழுத்தம் மற்றம் கல்வி நிறுவனங்களின் ஆதரவு இல்லாத காரணம் ஆகியவற்றால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனக்கூறியது. மேலும், அரசியல்சாசனத்தின் 32வது பிரிவை பயன்படுத்தி, மாணவர் தற்கொலையை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதன்படி, 1. தேர்வு நேரங்களின் போது, மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் முறையான பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் அல்லது ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.2.கல்வி நிறுவனங்களில் பணியாற்றும்ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் கட்டாயம் ஆண்டுக்கு இரண்டு முறை மன நல பயிற்சிக்கு செல்ல வேண்டும்.3.கல்வி நிறுவனங்கள் பாகுபாடற்ற அணுகுமுறையை நிலைநிறுத்தி பாதிக்கப்படக்கூடிய மற்றும் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாட ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.4. பாலியல் துன்புறுத்தல், ராகிங் மற்றும் வேறு பிரச்னைகளை கையாள நிறுவனங்களிலேயே குழு அல்லது அதிகாரிகளை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனரீதியிலான ஆதரவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.5.பெற்றோருக்கான விழிப்புணர்வு மற்றும் மனநலக் கல்வி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்.6.விடுதிகள், வகுப்பறைகள், பொது இடங்களிலும் தற்கொலை தடுப்பு எண்களை வைக்க வேண்டும்.7.வாழ்க்கை திறன்களை மாணவர் செயல்பாடுகளில் இணைப்பதுடன் அத தொடர்பான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.8.மாணவர் குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும்.9.கல்வி தொடர்பான அழுத்தம் - தேர்வு பயம் உள்ளிட்டவற்றை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.10.தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மாணவர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை வழங்கி மனஅழுத்தத்தை குறைக்கும் பணியை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pmsamy
ஜூலை 27, 2025 10:05

இந்தியாவில் அடிப்படை கலாச்சாரம் மாறவில்லை என்றால் எதையும் தடுக்க முடியாது இந்த அறிவு நீதிமன்றத்திற்கு இல்லை


GMM
ஜூலை 26, 2025 20:34

கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் கட்டாயம் ஆண்டுக்கு இரண்டு முறை மன நல பயிற்சிக்கு செல்ல உச்ச நீதிமன்றம் மன நல வழி காட்டு முறைகள்? மாணவர்கள், பெற்றோர்கள் கூட இணைக்க படுவர். திராவிட மனைவிக்கு சிறு குறை வைத்தால் அன்பாக பைத்தியமே வா போ என்று அழைக்க உதவியாக இருக்கும். கோபம் முற்றினால், மன நல ஹாஸ்பிடலில் சேர்க்க உதவியாக இருக்கும்? கல்வி போதனைகள் தன் ஆதிக்கம் செலுத்த தவறுடன் துவங்கு கின்றன? சிறுபான்மை அந்தஸ்து நீக்கி, மத சாயம் பூசாமல் ஒழுக்க முறை கல்வி தேவை.


தமிழ்வேள்
ஜூலை 26, 2025 20:03

கோட்டா சிஸ்டம் ஒழிக்கப்பட்டால் வாழ்வில் ஒழுங்கு/ ஒழுக்கம் தன்னால் படியும்....பாரத வாழ்வியலை தவிர்த்து போலி நாஸ்திக வாதம் கம்யூனிச சித்தாந்தம் வழிகாட்டியாக அமைத்துக் கொண்டால் அழுத்தம் தவிர்க்க முடியாமல் தற்கொலைக்கு தான் போக வேண்டும்.... போலித்தனமான காசைத்துரத்தி போலி பந்தா கடன்கார ஆடம்பர வாழ்க்கை தேட்டம் குறைந்தால் மட்டுமே மாணவ சமூகம் மட்டுமல்ல, பாரத சமுதாயம் முழுமையும் சீரான வாழ்க்கை முறையை கொண்டதாக இருக்கும்.


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2025 18:59

உச்சா போகும் அநீதித்துறை நெறிமுறைகளை வகுத்ததாம்???ஆடு வெட்டும் முஸ்லீம் யாரையும் கொலை செய்வது தவறு என்று சொல்வது போல இருக்கின்றது. அநீதித்துறையே உன்னை முதலில் நீ திருத்திக்கொள் 1 5.34 கோடி வழக்குகள் pending இதை முதலில் முடி பிறகு பேசு


Tamilan
ஜூலை 26, 2025 18:27

அந்நியமயமாக்கும் அரசுக்கு என்ன வேலை ?


Iyer
ஜூலை 26, 2025 18:24

 மார்க்குகளை முதன்மையாக்குவதை நிறுத்தவேண்டும்.  EXAMINATION SYSTEM ஒழிக்கவேண்டும்.  பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எதுவும் நமது அன்றாட வாழ்வில் உபயோகம் ஆவதில்லை  அன்றாட வாழ்வுக்கு தேவையான - ஆரோக்கியம், இயற்கை விவசாயம், போன்றவை பற்றி மாணவ மாணவிகள் அறிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் - யோகா, த்யானம், சூர்யநமஸ்கரம், பிராணாயாமம், நம்மாழவாரின் இயற்கை விவசாயம், தமிழர்களின் இயற்கை வைத்தியம், - போன்றவற்றை கற்பித்தால் தான் இதுபோன்ற கோழைத்தனமான தற்கொலைகள் நீங்கும்


GMM
ஜூலை 26, 2025 17:52

கல்வி, தேர்வின் அழுத்தம் அதிகரிக்க நீதி போதனைகள் நிறைந்த ஆரம்ப கல்வி இந்து மத நூல்கள் நீக்கம், மற்றும் தணிக்கை. அரசியல் பின்புலம் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபார நோக்கம் இருந்தால் மாணவர்களுக்கு ஆதரவு இருக்காது. மாணவர்கள் தற்கொலை இருக்கும்? அரசியல் சாசன 32 பிரிவை மத்திய சட்ட துறை கருத்து பெறாமல் உச்ச மன்றம் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 26, 2025 17:39

விடுதியில் தங்கி படிப்பதை தடை செய்ய வேண்டும். மாணவர்கள் அல்லது மாணவிகள் யாராயினும் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திற்குள் உள்ளூரில் தனது தாய் அல்லது தந்தை அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 16:41

எண்ணம் எப்படியிருந்தாலும் கோர்ட் சட்டங்களை உருவாக்குவது சரியல்ல. சமூகநலத்துறையின் பொறுப்பு.


crap
ஜூலை 26, 2025 21:06

இது சட்டமல்ல. இவை நெறிமுறைகள். அரசு சட்டம் இயற்றும் வரை இவை அமலில் இருக்கும் என்பதை தப்பும் தவறுமாக பத்திரிக்கையாளர் எழுதியிருக்கிறார்.


சமீபத்திய செய்தி