உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்: அமித் ஷா பகீர்

இண்டி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்: அமித் ஷா பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இண்டி' கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி, நக்சல் கொள்கைகளுக்கு ஆதரவானவர் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாக விமர்சித்துள்ளார். கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்த அவர், அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அமித் ஷா பேசியதாவது: இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே, முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை, துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்., நிறுத்தி உள்ளது. சுதர்ஷன் ரெட்டி யார் தெரியுமா? அவர் நீதிபதியாக இருந்தபோது, சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சால்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர். அவர் மட்டும் அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020ம் ஆண்டிலேயே நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப் பட்டிருக்கும். அவற்றை ஆதரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற உயர்வான அமைப்பை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர் தான் சுதர்ஷன் ரெட்டி. அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரசுக்கு, இடதுசாரிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்பதை கேரள மக்கள் போக போக தெரிந்து கொள்வர். இவ்வாறு அவர் பேசினார். சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க, உள்ளூர் பழங்குடியின இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்டது தான் சால்வா ஜுடும் என்ற அமைப்பு. இந்த அமைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2011, ஜூலை 5ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் ஒரு நீதிபதியாக அமர்ந்திருந்தவர் தான் சுதர்ஷன் ரெட்டி. இந்த அமர்வு, 'காட்டுத் தீயை அணைக்க, மற்றொரு முனையில் தீயை வைப்பது போல, நக்சல்களை ஒழிக்க, உள்ளூர் இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி, சத்தீஸ்கர் அரசின் சால்வா ஜுடும் அமைப்பை கலைக்க உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஆக 23, 2025 11:55

அமித்ஷா கூடத்தான் மதக்கலவரங்களை ஆதரித்து தூண்டி விடுபவர் என்று நாங்கள் சொல்கிறோம்!


ஆரூர் ரங்
ஆக 23, 2025 08:09

காஷ்மீரிலும் பயங்கரவாதிகளை சமாளிக்க பொதுமக்களுக்கு பயிற்சியும் தளபாடங்களையும் அளிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் என்ன சமூக சேவையா செய்கிறார்கள் ? அவர்களும் அன்னிய சீன ஏஜெண்ட்கள்தான்.


R.RAMACHANDRAN
ஆக 23, 2025 07:47

நக்சல்கள் தீவிரவாதிகள் ஆகியோர் உருவாவதற்கு காரணம் லஞ்சம் இன்றேல் அரசு சேவை இல்லை லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்காக அரசு அதிகார வர்கம் எத்தகைய குற்றத்தையும் செய்வதே ஆகும் என்பதை உணருவது எப்போதோ அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக ஆகும்.


GMM
ஆக 23, 2025 07:15

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க, உள்ளூர் பழங்குடியின இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க மாநில அரசு முடிவை அனுபவ ரீதியில் முடிவு செய்யாமல் துவக்கத்தில் நீதிபதி தடுப்பு தீர்வு கொடுத்தது அவரின் தன்னிச்சை முடிவு. நீதிபதிகளிடம் இடது, வலது சாரி மற்றும் நக்சல் ஆதரவு கொள்கை இருக்கு. தற்போது நீதிபதி கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தை கேள்வி கேட்பது சரியல்ல. நீதிபதியின் நக்சல் கொள்கையை திணிக்க தான்.? இதனை நிறுத்த மத்திய அரசு தயங்க கூடாது. நீதிமன்ற அதிகாரம், பணி விதிகள் ஒழுங்கு படுத்த வேண்டும்.


N.Purushothaman
ஆக 23, 2025 06:20

யூனியன் கார்பைட் விஷயத்தில் கூட இழப்பீடு சம்மந்தப்பட்ட வழக்கில் சி பி ஐ கோரிய விசாரணை மனுவை தள்ளுபடி செய்து வைத்தார் என்கிற விமர்சனமும் இவர் பெயரில் உள்ளது..


Parthasarathy Badrinarayanan
ஆக 23, 2025 05:32

கூட்டணியே தேசத்துரோகிகளின் கூடாரம்தான்


Kasimani Baskaran
ஆக 23, 2025 05:08

திராவிடர்கள் செத்தாலும் தமிழனை முன்னேறவிட மாட்டார்கள். அனைத்திலும் திராவிடர்கள் இருக்கவேண்டும் என்பது அவர்களின் கோட்பாடு. தமிழன் ஒருவனும் முன்னேறக்கூடாது என்பது எழுதாத விதி.


Thravisham
ஆக 23, 2025 06:55

உண்மை. அமைச்சர்களில் முக்கால்வாசி பேர் தெலுங்கர்கள்தான். கட்டுமரம் ஒரு முறை எம்ஜியாரை பார்த்து "மானங்கெட்ட மலையாளி" என்று விமர்சித்தது ஞாபகத்துக்கு வருகிறது


Priyan Vadanad
ஆக 23, 2025 03:53

ஒருத்தரின் பெயரை கெடுக்க பாட்ஷா எதையும் பேசுவார். தமிழர் ஒடிசாவை ஆளலாமா என்று பிரிவினை விஷத்தை விதைத்தவர்தானே இந்த பெரிய மனிதர்.


Parthasarathy Badrinarayanan
ஆக 23, 2025 05:33

உண்மையை சொன்னா எரியுதா


vivek
ஆக 23, 2025 05:51

....உண்மைய சொன்னா புரிந்து கொள்ள முடியாது


வாய்மையே வெல்லும்
ஆக 23, 2025 07:35

கள்ளக்குடியேறிகளின் சொப்பன சுந்தரி ஆட்டம் தான் காங்கிரஸ் செய்து வோட்டு பிச்சை எடுக்குதுன்னு கூறினால் மடசம்ப்ராணிகளுக்கு புரியாதே