உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய - பாக்., வெளியுறவு செயலர்கள் ஆலோசனை

இந்திய - பாக்., வெளியுறவு செயலர்கள் ஆலோசனை

புதுடில்லி:இந்திய - பாக்., வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சு இன்று துவங்கவுள்ள நிலையில், இதுபற்றிய விவரங்களை தயார் செய்வது குறித்து, இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களும், நேற்று ஆலோசனை நடத்தினர்.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, பாக்., வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கார், ஆகியோருக்கு இடையே, இன்று முக்கிய பேச்சு நடக்கவுள்ளது. இதற்காக, ஹினா ரப்பானி நேற்று டில்லி வந்தார். அவர் கூறுகையில்,'இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையே நடக்கவுள்ள பேச்சு, பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்' என்றார்.இதற்கிடையே, வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே, என்னென்ன விவரங்கள் குறித்து பேசப்பட வேண்டும் என்பதை இறுதி செய்வதற்காக, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் ஆகியோர், நேற்று பேச்சு நடத்தினர். இதில், 'எல்லைப் பிரச்னை, காஷ்மீர் விவகாரம், வர்த்தகம், பயங்கரவாதம் உள்ளிட்ட விஷயம் குறித்து, இன்றைய பேச்சுவார்த்தையில் விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ