உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2014ல், 10வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம், 4 டிரில்லியன் டாலர், அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.உலகின் பெரும் பொருளாதார நாடுகளை, அதன், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.கடந்த, 2014ல், இந்த பட்டியலில் நம் நாடு, 10வது இடத்தில் இருந்தது. கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட, சர்வதேச நாணய நிதியத்தின், 2025ம் ஆண்டுக்கான உலக பொருளாதார கண்ணோட்டம் அறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியா, நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறப்பட்டிருந்தது.

பிரகாசமான வாய்ப்பு

இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம், நிடி ஆயோக் அமைப்பின், 10வது ஆண்டு கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் தொடர்பாக, டில்லியில் நேற்று பேசிய, நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறியதாவது:உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய புள்ளி விபரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தி இந்த நிலையை எட்டியுள்ளோம்.தற்போதுள்ள நம் பொருளாதார வளர்ச்சி நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதற்கு நமக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போதைய நிலையில், ஜெர்மனியின் ஜி.டி.பி., 4.744 டிரில்லியன் டாலராக, அதாவது 403.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2024 - 25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்தபோதும், மூன்றாவது காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது.

சீர்திருத்த நடவடிக்கை

இப்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கடந்த, 2014ல் இந்த பட்டியலில், இந்தியா, 10வது இடத்தில் இருந்தது. 2022 செப்டம்பரில் ஐந்தாவது இடத்தை பிடித்தோம். அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளோம்.சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, 2013 - 14ல் இந்தியாவின் தனிநபர் வருவாய், 1,22,476 ரூபாயாக இருந்தது. இது 2025ல், 2,45,293 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், 2025 - 26ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பான, 6.5 சதவீதத்தைவிட சற்று குறைவாகும். உலகளாவிய புவிஅரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள், வர்த்தகப் போட்டிகள் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Senthoora
மே 25, 2025 19:16

முதலாவது இடத்துக்கே வரலாம், பாங்கில் பணம் போட்டா வரி, எடுத்தால் வரி, பணம் இல்லாட்டி வரி பணம் வங்கியில் இருந்தா வரி, வீடுவாங்க பணம் வங்கியில் சேர்த்தா வரி, அதை எடுத்து வீடுவாங்கினாள் வரி, நின்னா வரி, இருந்தால் வரி படுத்தாள் வரி, டிரம்ப் ஐயாவிடம் கேட்டு இன்னும் வரி வீதத்தை உயர்த்தினாள் முதலாவது இடத்துக்கு வரலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 25, 2025 18:16

இளைஞர்களின் சதவிகிதம் அதிகம் .... இளைஞர்களின் அவுட்புட் என்ன ?? ரிசல்ட் என்ன ?? நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன ??


Rathna
மே 25, 2025 17:56

இந்திய ரூபாய் மதிப்பில் 340 லக்ஷம் கோடி ரூபாயாக வளர்ந்து உள்ளது. இது உற்பத்தி மற்றும் சேவை துறையின் ஆண்டு பண மதிப்பாகும். ஆனால் அரசாங்கங்கள் பல இலவசங்களை வருமானம் சம்பந்த படாமல் வழங்குவதால் அரசாங்கத்தை நடத்த முடியாத நிலைமை சில மாநிலங்களில் உள்ளது. 1. உதாரணமாக இலவச அரிசி திட்டம். அதன் பயனாளி 1 லக்ஷம் வருவாய் உள்ளவனும் குறைந்த விலைக்கு வாங்குகிறான். 2. இலவச பஸ் பயணம் Rs 50000 சம்பளம் வாங்கும் பெண்களுக்கு எதற்கு? 3. என்ணிக்கையில்லாத பங்களாதேஷிகள் இங்கே இதன் மூலம் பல மாநிலங்களில் ஊடுருவின்கின்றனர்


N Sasikumar Yadhav
மே 25, 2025 13:20

உலகில் நான்காவது பொருளாதார நாடாக பாரதம் இருக்கலாம். ஆனால் உலகின் முதல் பொருளாதார குடும்பமாக கோபாலபுரத்தை அசைக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை


Apposthalan samlin
மே 25, 2025 13:10

நான்கு பேர் பொருளாதாரம் மட்டும் உயர்ந்து உள்ளது


Rajarajan
மே 25, 2025 12:37

உண்மை தான். எல்லாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்தினால், அதனால் பயன் பெறுவது என்னமோ அரசு ஊழியர் மட்டும் தானே இல்லனா, பொருளாதாரத்தில் நாடு இவ்ளோ உயர்ந்தும், இன்னும் அரசு ஊழியருக்கு மட்டும் பஞ்சபடி வழங்கப்படுதே நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்கள், அவங்களுக்காக மட்டும் நடத்தப்படுதே. இந்த வீணான செலவால, அரசின் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள் இன்னும் முழுமை பெறாம தானே இருக்கு. உண்மையா இல்லையா ??


நிவேதா
மே 25, 2025 13:48

அது பஞ்சபடி அல்ல. அகவிலைப்படி. நீங்கள் கூறியபடி அரசு / பொதுத்துறை நிறுவனங்கள், அவங்களுக்காக நடத்தப்படவில்லை. அவர்கள் நடத்துகிறார்கள். அரசின் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு அரசு அறிவிக்கும் இலவசங்களும் ஊழலும் பொறுப்பற்ற சில அரசு ஊழியர்களுமே. இதை இருத்த நினைக்கும் பொறுப்பான கண்டிப்பான அரசு அதிகாரிகள் பலநேரங்களில் இந்த அரசாலும் நீதித்துறையாலும் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுகின்றனர்.


Ramesh Sargam
மே 25, 2025 12:27

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று கூறி பெருமை தேடிக்கொள்ளுகிறீர்கள். ஆனால் நான் ஸ்டாலின் என் தமிழகத்துக்கு நிதி கேட்டால் ரொம்பவே யோசிக்கிறீர்கள், என்று ஸ்டாலின் கோபித்துக்கொள்ள வாய்ப்புண்டு.


Vishnu
மே 25, 2025 11:13

Can bring emoji options too along with comment and share options. This will help us to react to the particular news.


Padmasridharan
மே 25, 2025 10:59

பொருளாதாரம் வளர்த்த மக்களின் திருமணம்_விவாகரத்தும் வளர்ந்துள்ளது இதையும் பெருமிதமாக கொள்ளவேண்டுமா இராமர் சீதை இருந்த இந்திய நாட்டில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை