உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இண்டி கூட்டணியில் முரண்பாடு: முறுக்கும் திமுக, அடம்பிடிக்கும் திரிணமுல்

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இண்டி கூட்டணியில் முரண்பாடு: முறுக்கும் திமுக, அடம்பிடிக்கும் திரிணமுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் திமுக, திரிணமுல் காங்கிரஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ஜூலை 21ல் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் செப். 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னரும், தமிழருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி களம் இறங்கி உள்ளது.தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவரை எதிர்த்து யாரை போட்டியிட வைப்பது என்பதை இண்டி கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளன. ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுபவரும் ஒரு தமிழராக இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணமாக உள்ளதாக தெரிகிறது.ஒரு தமிழர் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவரை ஆதரிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் கூறி இருக்கிறார்.இந்நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இண்டி கூட்டணிக் கட்சிகள் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பதிலடியாக இண்டி கூட்டணியிலும் தமிழர் ஒருவரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.ஆனால், அரசியல் கலப்பு இல்லாத ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று திரிணமுல் கட்சி இண்டி கூட்டணியின் மற்ற கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறது.இண்டி. கூட்டணியில் உள்ள முக்கியமான இரு கட்சிகள் இப்படி முரண்பாடான நிலைப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள், பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போதுள்ள 781 எம்பிக்களில் 391 ஒட்டுகள் பெறுபவருக்கே வெற்றி என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் 422 எம்பிக்கள் ஆதரவு உள்ளனர். எனவே அக்கூட்டணி வேட்பாளர் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. இண்டி கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற போதிலும், கூட்டணியில் தங்கள் ஆதிக்கத்தை காட்டுவதற்கான வாய்ப்பாக இந்த வேட்பாளர் தேர்வு மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலை திமுகவும்,திரிணமுல் காங்கிரசும் பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர் நடப்புகால அரசியல் நிகழ்வை கவனிப்பவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Natarajan Ramanathan
ஆக 18, 2025 22:26

இதற்கு முன்பே இரண்டுமுறை தமிழர்கள் அப்துல் கலாம் அய்யா ஜனாதிபதி ஆகவும் கருப்பையா மூப்பனார் பிரதமர் ஆகவும் எதிர்ப்பு தெரிவித்த கட்சி தீயமுகதான். இப்போது காமராஜர் அய்யாவை இழிவு படுத்திய ஒரு பொறுக்கியை துணை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்வதும் அதே தீயமுகதான். காங்கிரசு ரோஷம் மானம் எதுவுமே இருக்காதா?


D Natarajan
ஆக 18, 2025 21:52

தமிழனுக்கு ஆதரவில்லை. திருட்டு திமுக. இவர்கள் தமிழர்கள் இல்லை. திருட்டு த்ரவிடர்கள் . தமிழனே வீறு கொண்டு எழு , 2026 ல் திருட்டு திராவிடர்களுக்கு பாடம் புகட்டுங்கள்


sankaranarayanan
ஆக 18, 2025 21:16

முன்பு இதே போன்றுதான் கருப்பையா மூப்பனார் தமிழர் ஒருவர் காங்கிரசு சார்பாக கூட்டணியில் பிரதமர் ஆவதற்கு தீர்மானம் ஏற்படும்போது தமிழக திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி அதை எதிர்த்தார் ஒரு தமிழர் அவரைத்தவிர வேறு யாருமே பிதமராக வரக்கூடாது என்று குறுக்கே நின்று தமிழன் பிரதமர் ஆவதை தடுத்தார் அதனால் எங்கேயோ ஒரு மூலையில் கடந்த தேவகவுடாவிற்கு பிரதமர் ஆகும் சந்தர்ப்பம் வந்ததை கலைஞர் அதை முழுவதும் ஆதரித்தார் அதையே இப்போதும் திராவிட மாடல் அரசு பின்பற்றுகிறது ஆனால் அது வெற்றியை கிட்டது ஏமாளியாகிவிடும் தமிழனுக்கு தமிழனே எதிரி என்பது கண்கூடா காட்சியாகும் - தனக்கு கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் இருக்கும் அடுத்தவனுக்கு கிடைக்கக்கூடாது என்ற எண்ணம்தான் அரசியலையே பாழாக்குகிறது


Vidyasagar Shenoy . S
ஆக 18, 2025 21:13

DMK வில் நிறய ததீகள் இருக்கிறார்களே பின்ன என்ன அனால் அவை நடத்த ஹிந்தி தெரியாது


visu
ஆக 18, 2025 21:08

அப்துல் கலாமை ஜனாதிபதியாக நிறுத்த கருணாநிதி மறுப்பு தெரிவித்தார் ஆகா தமிழனை எதிர்ப்பது திமுக வுக்கு இது முதல் முறையில்லை


Murugesan
ஆக 18, 2025 20:55

என்றைக்கமே தமிழகத்தை சீரழித்த அயோக்கியனுங்க திராவிட திமுக தெலுங்கு வந்தேறி கருணாநிதி திருட்டு குடும்பம், மூப்பனார் அப்துல் கலாம், திமுக அயோக்கியனுங்கர்கள் சாபக்கேடு


Ganesun Iyer
ஆக 18, 2025 20:31

தமிழரை ஆதரிக்காத தமிழ்நாட்டில் ஜெயித்த தெலுகு திராவிடர்கள்.


Ramesh Sargam
ஆக 18, 2025 20:20

ராகுல் காந்தியின் இத்தாலி பாட்டியை கூப்பிட்டுகொண்டுவந்து அவருக்கு இந்திய குடியுரிமை கொடுத்து துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கலாமா...? பேசாம காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சமீபகாலமாக செயல்படும் அந்த கட்சியின் மூத்த தலைவர் சசி தரூருக்கு அந்த வாய்ப்பு கொடுத்தால்...?


ஈசன்
ஆக 18, 2025 19:39

அதான் தே.ஜ கூட்டணிக்கு 422 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதே. பின் எதற்காக ராஜ்நாத் திமுகவின் ஆதரவுக்கு கோரிக்கை வைத்தார்


KavikumarRam
ஆக 18, 2025 20:35

அதன் பெயர் அரசியல் நாகரிகம். அது திமுகவுக்கு கிடையாது என்பது வேறு விஷயம்.


ஆரூர் ரங்
ஆக 18, 2025 19:22

பலிகடாவைத் தேடும் ராஜாக்க‌ள் .


SUBBU,MADURAI
ஆக 18, 2025 19:53

இவனுக இப்படியெல்லாம் அடிச்சிக்கிட்டு மல்லுக்கட்டி உருளணும்னுதான பாஜக ஒரு தமிழரை வேட்பாளரா நிறுத்தியிருக்கிறது!


சமீபத்திய செய்தி