உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்

இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்

புதுடில்லி: இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மேலும் நெருக்கம் அடைய வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் கூறினார்.இந்தியா மற்றும் சீனாவின் ராஜதந்திர உறவுகள் தொடங்கியதன் 75 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, சீன அதிபர் ஜின்பிங், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.வாழ்த்துச் செய்தியில் ஜின்பிங் கூறியதாவது:அண்டை நாடுகளாக இருக்கும் நாம் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். முக்கிய சர்வதேச விவகாரங்களில் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த வேண்டும். எல்லைப் பகுதிகளில் அமைதியைக் கூட்டாகப் பாதுகாப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், 'இன்று இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய ஜனாதிபதி முர்மு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இவர்கள் தவிர இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீனப் பிரதமர் லி கியாங்கும் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhakt
ஏப் 02, 2025 00:39

Never need friendship of a Backstabber


நிக்கோல்தாம்சன்
ஏப் 01, 2025 21:28

தேவையில்லாத ஆணி


Ramesh Sargam
ஏப் 01, 2025 19:46

இந்திய-சீன உறவு நெருக்கம் ஆகவேண்டுமென்றால், சீனா முதலில் அருணாச்சலப்பிரதேசம் போன்ற இந்திய எல்லையிலிருந்து ரொம்ப தூர போகணும். சீனா நம் இந்திய எல்லையிலிருந்து தூரம் போகப்போக, இந்தியா-சீன உறவு நெருக்கம் ஆகும் என்பதில் ஐயமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை