உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துறவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை : வங்கதேசத்திடம் இந்தியா எதிர்பார்ப்பு

துறவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை : வங்கதேசத்திடம் இந்தியா எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வங்கதேசத்தில் ஹிந்துத் துறவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கு நேர்மையான விசாரணை கிடைப்பதை அந்நாடு உறுதி செய்ய வேண்டும்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரம்மச்சாரியை கடந்த ஆண்டு நவ.,25 ல் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்த விவகாரத்தில் கைதானவர்களுக்கு நேர்மையான விசாரணை கிடைப்பதை வங்கதேசத்தின் நடவடிக்கைகள் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக அந்நாட்டிடம் இருந்து இந்திய அரசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வந்தது. இதற்கு மேல் சொல்வதற்கு தற்போது ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 04, 2025 09:06

துறவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை - இந்தியா கெஞ்சல். தலைப்பு இப்படி இருக்க வேண்டும்.....!!!


Vasoodhevun KK
ஜன 06, 2025 17:20

நம்ம நாட்டை கேவலமா பேச வேற பேர்ல இருக்கும் நபர் தூ


C.SRIRAM
ஜன 04, 2025 02:38

உள்நாட்டு விவகாரம் என்று அந்த பங்களாதேஷ் வெளியுறவு ஆலோசகன் சொன்னால் அவனை கடுமையாக தண்டிக்க வழி வகை செய்வது நல்லது . பங்களாதேஷ் இரண்டாவது பாகிஸ்தானாக மட்டுமே கருதப்படவேண்டும் என்ன இலவசம் கொடுத்தாலும் ஒரு பயனும் இல்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை