உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்சிடம் இருந்து வாங்கும் இந்தியா

ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்சிடம் இருந்து வாங்கும் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kr3lte4a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rasheel
ஏப் 09, 2025 17:58

அதி நவீன விமானம் தயாரிக்கும் தொழில் நுட்பம் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின்,இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளிடம், தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது.இந்த தொழில் நுட்பத்தை விற்க இந்த நாடுகள் தயாராக இல்லை. ரஷ்யா மட்டுமே தயாராக உள்ளது. ஆனால் தரம் இல்லை.இந்தியா இது போன்ற தரமான நவீன விமானங்களை தயாரிக்க இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். இந்த காண்ட்ராக்ட் இந்தியா பிரான்ஸ் அரசாங்களிடம் நடப்பதால் ஊழல் இருக்காது. 2014க்கு முந்தய நிலை இப்போது இல்லை.


துன்பநிதி
ஏப் 09, 2025 16:41

மத்திய அரசில் ஊழல் என்பது காங்கிரஸ் காலத்தோடு முடிந்து விட்டது. இனி மாறாதவர்கள் மனம் திருந்தும் வரை புலம்பியே காலம் தள்ளலாம்.


என்றும் இந்தியன்
ஏப் 09, 2025 16:29

ரூ 63,000 கோடியில் ரபேல் வாங்குவதை விட இங்கேயே அந்த தொழிற்சாலை அமைத்தால் 18 மாதங்களில் வேண்டிய அளவுக்கு நாமே ரபேல் விமானங்களை தயாரிக்க முடியும் அது ரூ 31,500 கோடியை தாண்டாது இது உறுதி ?????


M R Radha
ஏப் 09, 2025 20:48

உண்மைதான். ஆனால் நேருவினால் ஆதரிக்கப்பட்ட சோசலிஸத்தில் பெருச்சாளி கம்மிகள் புகுந்து அரசாங்க பொது நிறுவனங்களை சர்வ நாசமாக்கி விட்டார்கள். இந்தியாவில் மோடி வந்த பிறகே தனியார் நிறுவனங்கள் துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் போர் விமானங்கள் இங்கேயே தயாரிக்கும் சூழல் உருவாகும்.


நல்லவன்
ஏப் 10, 2025 07:36

என்னா ஒரு புத்திசாலித்தனம்


ஸ்ரீ
ஏப் 09, 2025 15:06

ரபேல் என்றவுடன் பப்பு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவாரே.....


மூர்க்கன்
ஏப் 09, 2025 15:30

சொறிங்க ஸ்ரீ ?? அப்போ அந்த நூறு விமானங்களை உள்நாட்டில் டாசல்ட்டும் ரிலைன்சும் தயாரிச்சுட்ட்டங்களா என்ன ?? யார் கிட்ட கத உடுறீங்க. இதைத்தானே அந்த டைலர் சொன்னான் . இதை விட பச்சையா யாரும் பூசி மெழுக முடியாது.


Thetamilan
ஏப் 09, 2025 15:04

பழங்காலத்தை நவீனத்துடன் இணைக்கும் முயற்சி . பழங்கால ஆங்கிலேய கொள்ளையர்களை ஊக்குவிக்க இந்தியாவில் கொள்ளையடித்து அவர்நாடுகளிலேயே கொண்டு போய் சேர்க்கும் உத்தி


Thetamilan
ஏப் 09, 2025 15:01

மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது


Kumar Kumzi
ஏப் 09, 2025 15:20

மூர்க்கன் வரி கட்டமாட்டாரே. அப்புறம் எதுக்கு புலம்பல்


Pandi Muni
ஏப் 09, 2025 16:27

1 ரூபாயாவது வரின்னு கட்டி இருப்பியா நீ


மூர்க்கன்
ஏப் 09, 2025 16:50

நான் என் வருமானத்தில் பாதி வரி காட்டுறேன்


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 14:42

ட்ரோன்கள், ஏவுகணை யுகத்தில் இவ்வளவு விமானங்களை வாங்குவது எதற்கு என்று புரியவில்லை.


மூர்க்கன்
ஏப் 09, 2025 15:33

தெரிஞ்சிகிட்டே தெரியாத மாதிரி நடிப்பியே?? எல்லாம் கமிஷனுக்குத்தான். அந்த நாட்டு விசாரணையில் ஏற்கனவே உண்மை வெளி வந்திருச்சு. வாட்ச் பில் மட்டுமல்ல எல்லாமே போலிதான் .


சமீபத்திய செய்தி