உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா, பாக்., சீனாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள்?

இந்தியா, பாக்., சீனாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ பாகிஸ்தானை விட இந்தியாவிடம் 2 அணு ஆயுதங்கள் கூடுதலாக உள்ளது '' என ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pl2ahrpi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 அணு ஆயுத நாடுகள், தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது.இந்த ஆண்டு ஜன., நிலவரப்படி இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 170 அணுஆயுதங்கள் மட்டுமே உள்ளது. 2023 ல் இந்தியா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இதே ஆண்டில், இந்தியாவும், பாகிஸ்தானும், அணு ஆயுதங்களை ஏவி விடும் அமைப்பில் புது வழிகளை அறிமுகம் செய்தது. சீனாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் வகையில், இந்தியா தனது அணு ஆயுதங்களை மேம்படுத்தியது.சீனாவும் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. 2023 ல் அந்நாடு 410 ல் இருந்து 500 ஆக அணு ஆயுதங்களை அதிகரித்து உள்ளது. சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும், அணு ஆயுதங்கள் நிரப்பிய கப்பல்களை நிலை நிறுத்துவதிலும் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும், அணு ஆயதங்களை சீனா தயாரித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா நாடுகளை சீனா முந்த முடியவில்லை.உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajah
ஜூன் 18, 2024 18:59

காங்கிரஸ் தலைவரிடம் கேட்டால் பாகிஸ்தான் அணு ஆயுதம் பற்றிக் கூறுவார்கள். மணி ஷங்கர் அய்யருக்கு எல்லாமே தெரியும். தாய் நாட்டின் விஷுவாசம் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 18, 2024 16:17

பூமியின் சுழற்சி வேகத்தோடு சுழலும் செயற்க்கைக்கோள் வைத்திருக்கும் நாட்டால்தான் எந்த ஒரு பகுதிக்கும் அணுவாயுதத்தை பத்திரமாக வீச முடியும். பாகிஸ்தானிடம் அப்படி வசதி கிடையாது. சீனாவோ அல்லது வடகொரியாவோ உதவினால்தான் உண்டு. அப்படி உதவும் பட்சத்தில் சீன எல்லை மற்றும் தென் சீனக்கடலில் சீனா சிக்கலில் மாட்டிக்கொள்ளும். மொத்த ஆசியாவையும் பகைத்துக்கொள்ள சீனா தயாரில்லை.


Senthil K
ஜூன் 18, 2024 14:39

பாக்கிஸ்தான் இடம் அணு ஆயுதங்கள்.. உள்ளது.. என்ற செய்தி... அப்பட்டமான பொய்... அந்த அளவிற்கு மூர்க்க பயலிடம் ... அறிவு கிடையாது.... ஒரு வேளை.. அமெரிக்கா.. கொடுத்ததாக இருக்கலாம்... ஆனால்... கட்டுப்பாடு.. அமெரிக்காவிடம் தான் இருக்கும்....


SANKAR
ஜூன் 18, 2024 16:55

read JANES DEFENCE JOURNAL .You will have plenty of information.Pak first tested in May 1998.Obama is on record saying possibility of nuclear war between India and Pak gives him shivers and sleepless nights


Pandi Muni
ஜூன் 18, 2024 17:16

அய்யோ அய்யோ


SANKAR
ஜூன் 18, 2024 14:20

this is what mani shankara Iyer said and cautioned us these are under control of Pak army which is controlled by terrorists. ours under control of responsible persond


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை