உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு உத்தரவிட எந்த சக்தியும் இல்லை: துணை ஜனாதிபதி பேச்சு

இந்தியாவுக்கு உத்தரவிட எந்த சக்தியும் இல்லை: துணை ஜனாதிபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' நமது விவகாரங்களை எப்படி கையாள வேண்டும் என இந்தியாவுக்கு உத்தரவிடுவதற்கு இந்த கிரகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.டில்லியில் துணை ஜனாதிபதி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய பாதுகாப்பு சேவையில் பயிற்சி முடித்த அதிகாரிகள் மத்தியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு நாம் பாடம் கற்றுக் கொடுத்தோம். பாகிஸ்தானின் பஹவல்பூர் மற்றும் முரிக்டே மீது தாக்குதல் நடத்தினோம். நமது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது. அது ஏன் நிறுத்தப்பட்டது என சிலர் கேட்கின்றனர். நாம் அமைதி, அஹிம்சையை விரும்பும் நாடு. புத்தர், மகாவீரர், மஹாத்மா காந்தி பிறந்த மண். உயிரினங்களை கொல்வது நமது எண்ணம் கிடையாது. பிறகு எப்படி அப்பாவி மக்களை கொல்வோம். நல்லறிவை உருவாக்குவதும், மனிதாபிமான உணர்வை உருவாக்குவதும் தான் இதன் நோக்கமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு கடினமான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளோம். இதனை நாம் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும். வெளியில் இருந்து வரும் கதைகளை நம்பக்கூடாது. இறையாண்மை மிக்க நமது நாட்டில் முடிவுகள் அனைத்தும் அதன் தலைவர்களாலேயே எடுக்கப்படுகிறது.தனது விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என இந்தியாவுக்கு உத்தரவிடுவதற்கு எந்த சக்தியும்இல்லை. இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Shiva
ஜூலை 20, 2025 10:50

Aa a citizen of India you must respect the Second Citizen of India.


அப்பாவி
ஜூலை 19, 2025 22:59

என்ன பேசினாலும் ஜனாதிபதி ஆக முடியாது.


அப்பாவி
ஜூலை 19, 2025 22:58

இங்கே இவரு மாதிரி ஆளுங்களை இப்பிடி பேசச்சொல்லுவாங்க. அங்கே டெஸ்லா காரு விக்க அனுமதி குடுத்து ஒப்பந்தம் போடுவாங்க. அப்பாச்சி இறக்குமதி அதிகமாகும். இதெல்லாம் ஆணையல்ல. ஒரு பக்ஜம் பிரிட்டிஷ் அடையாளத்தை அழிக்கிறேன்னுட்டு இங்கிருந்து பிரிட்டன் போய் வணிக ஒப்பந்தம் கையெழுத்து போட இவரை வரச்சொல்லி ஆணையிடுவாங்க. போவோம்.


தஞ்சை மன்னர்
ஜூலை 19, 2025 21:27

டிராம்ப் 18 வது தடவையாக சொல்லி இருக்கார் .அதற்கு முதலில் பதில் கொடுங்கள்.டிரம்ப் என்ன சாதாரண ஆளா!ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அதிபர்.உலக பொருளாதாரத்தினை ஆட்டி படைக்கும் சக்தி உள்ள நபர் அவர் சொல்லுகிறார் என்றால் நெருப்பு இல்லாமல் புகையாது.


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 21:58

டிரம்ப் பேசுவதை அவரே கேட்பதில்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். அவற்றைக் கேட்கும் போதெல்லாம் பாலைவன மார்க்க புத்தகம்தான் நினைவுக்கு வருகிறது.


ஹரிஹரன்,தஞ்சாவூர்
ஜூலை 19, 2025 22:01

மூர்க்கனே நீஉண்பது இந்த தேசத்தின் சோற்றை ஆனால் நீ வாலாட்டுவது உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு .இது துரோகம் இல்லையா மூர்க்கமாக பிறந்து விட்டாலே இந்திய எதிர்ப்பு உங்கள் இரத்தத்தில் கலந்து விடுமா? இனிமேலும் இது போல் தேசத்திற்கு எதிரான கருத்தை போட்டால்...


தத்வமசி
ஜூலை 19, 2025 22:29

மத்தியில் நடப்பது விடியாத நாடக சூட்டிங் கம்பெனி ஆட்சி அல்ல. மோடி ஆட்சி. உமக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தெரியாது, புரியாது, விளங்காது.


subramanian
ஜூலை 19, 2025 22:50

இனிமேல் இப்படி பதிவு போட்டால், உன்னை கைது செய்ய முடியும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 20, 2025 01:29

எரியுது மூர்க்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை