உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் இந்தியா ஆர்வம்; உலக தடகள சங்க தலைவர் மகிழ்ச்சி

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் இந்தியா ஆர்வம்; உலக தடகள சங்க தலைவர் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''வரும் 2036ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் இந்தியாவின் ஆர்வத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி'' என உலக தடகள தலைவர் செபாஸ்டியன் கோ கூறினார்.68 வயதான செபாஸ்டியன் கோ, இரண்டு முறை ஒலிம்பிக்கில் 1,500 மீட்டர் தடகளத்தில் சாம்பியன் ஆவார்.கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டுக் குழுவின் தலைவர். செபாஸ்டியன் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது ஒலிம்பிக்-2036 போட்டியை நடத்துவதற்கான இந்தியாவின் வாய்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.இச்சந்திப்பு குறித்து செபாஸ்டியன் கூறியதாவது:இந்தியா வளர்ந்து வரும் விளையாட்டு சக்தியாகும், ஆனால் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவில்லை. ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.ஒலிம்பிக் போட்டிகள் ஒரு தனித்துவமான விளையாட்டு நிகழ்வு.இந்தியா, விளையாட்டுத் துறையைத் தாண்டி சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கான பார்வை கொண்ட நாடாகவும் உள்ளது. இந்தியாவுடன் இந்தோனேஷியா, எகிப்து, துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் 2032 ஒலிம்பிக்கை நடத்தவுள்ளது.இவ்வாறு செபாஸ்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
நவ 27, 2024 04:42

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் ஐந்து இடங்களிலாவது மெடல்கள் வாங்கி இருந்தால் இதை நடத்துவதில் ஹிந்துஸ்தானுக்கு பெருமை. பாரதம் ஒலிம்பிக் போட்டி நடத்தி அதில் நூற்றி நாற்பதாவது இடத்தில் இருந்தால் காரி உமிழ்வார்கள். இதை நாம் உணரவேண்டும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 27, 2024 14:33

எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த நினைப்பது மடத்தனம். ஒலிம்பிக் போட்டிகளில் மெடல் வாங்குவதில் வேண்டுமானால் நாம் பின் தங்கி இருக்கலாம். ஆனால் போட்டிகள் நடத்துமளவு நம்மிடம் திறமை தொழிநுட்பம் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும். தமிழ் மிகவும் பழைமையான தொன்மையான மொழி எனக் கூறிக்கொண்டு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. பாரத கலாச்சாரம் தொன்மையான கலாச்சாரம். எனக்கூறி கொள்வதில் பயனில்லை. நம்மிடையே உலக நாடுகள் கண்டு வியக்கும் வண்ணம் ஒருங்கிணைத்து நடத்த முடியும் என உலகிற்கு பறை சாற்ற வேண்டும். அப்பொழுது தான் நமது மொழி தமிழ் உட்பட பாரத நாட்டின் மொழிகள் கலாச்சாரம் உலகில் வேகமாக பரவும். ஆசிய விளையாட்டு போட்டிகள் முதன் முதலில் இந்திரா காந்தி பிரதமர் காலத்தில் நடந்த போது தற்போது உள்ள அளவு தொழில்நுட்பம் இல்லை. ஆனால் கோயமுத்தூர் UMS ரேடியோ நிறுவனத்தினர் தற்போதைய அவினாசி ரோட்டில் உள்ள அன்னாசிலை எதிர்ப்புறம் உள்ள வோடாபோன் அலுவலகம் அப்பொழுதே டெல்லி தொலைகாட்சியில் கலரில் ஒளிபரப்பான அந்த சமயத்தில் கோவையில் தூர்தர்ஷன் இல்லை ஆசிய விளையாட்டு போட்டிகள் வீடியோ கேசட்ல் பதிவு செய்து அன்றைய தினம் டெல்லியில் இருந்து கோயமுத்தூர் வரும் விமானத்தில் கொண்டு வந்து மிகப் பெரிய டிவி வைத்து UMS ரேடியோ நிறுவனத்தில் பொது மக்கள் கண்டு களிக்க இலவசமாக திரையிட்டார்கள். ஆகவே யாரும் காரி உமிழ மாட்டார்கள். பாராட்ட தான் செய்வார்கள். விளையாட்டு போட்டிகளில் எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கக்கூடாது. அனால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட வேண்டும். சூழ்ச்சி செய்து வெற்றி பெற கூடாது திறமையை காட்டி வெற்றி பெற வேண்டும். பொறாமை குணம் கூடாது அனால் போட்டி மனப்பான்மை வேண்டும். கோபம் கூடாது எதையும் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும். உலக அரங்கில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டுவோம் 2036.


Oru Indiyan
நவ 26, 2024 23:03

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஒரு கனவு. நடக்குமா இங்கு?. நடந்தால் சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை