உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிடணும்: தமிழக சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்

வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிடணும்: தமிழக சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்தியா'' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.வக்பு சட்டத்திருத்த மசோதாவைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வேற்றுமையில் ஒற்றுமை என்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழும் நாடு இந்தியா.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cfy3zpqc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும். பா.ஜ., கூட்டணி அரசின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் துன்புறுத்தியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா சிறுபான்மை மக்களை கடுமையாக வஞ்சிக்கிறது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மாநில சுயாட்சியை பாதிக்கும். இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்பு சட்டத் திருத்தம் இருக்கிறது. வக்பு சட்டத்திருத்தத்தை பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., எம்.பி.,க்கள் கடுமையாக எதிர்த்தனர். சட்டத்திருத்தத்தின் மீது எதிர்கட்சிகள் சொன்ன திருத்தங்களை பார்லி கூட்டுக்குழு நிராகரித்துள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த முன் வடிவினை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

S.V.Srinivasan
ஏப் 04, 2025 18:41

வக்ப் வாரிய சட்டத்தை நேற்றைக்கே மக்களவை, மேலவையில் கைவிட்டு மேசை மேல் வைத்து விட்டார்கள் முக்யமந்திரி அவர்களே.


Keshavan.J
ஏப் 02, 2025 11:35

I really wish WAQF should any one of DMK party property in coming days. Then we will see his stands


Keshavan.J
ஏப் 02, 2025 11:33

காமெடி போலீஸ் மாதிரி இவர் காமெடி முதல்வர்.


S.V.Srinivasan
ஏப் 02, 2025 10:43

முடியாது.


Jay
மார் 28, 2025 10:39

தற்போது உள்ள சட்டத்தின்படி வக்ஃப் வாரியம் அறிவாலயத்தையும் கோபாலபுரம் வீடு, சீட் நகர் வீட்டையும் உரிமை கொண்டாடலாம். அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடியாது. இதை அப்படியே விட்டு விடலாமா? மாற்ற வேண்டியதில்லையா?


RAMESH
மார் 27, 2025 21:03

ஓட்டு...ஓட்டு...ஓட்டு....


RAMESH
மார் 27, 2025 20:54

தமிழக கோவில்கள் பணம் சுரண்டல் போக்கை கை விட முடியுமா....அப்புறம் வக்பு பற்றி பேசலாம்.. ஓட்டுக்கு....எடுக்கும் திராவிட மாடல்


spr
மார் 27, 2025 19:27

"சிறுபான்மை மக்களுக்கு எதிரான,மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன." வக்ப் சட்டத்திற்கும் சிறுபான்மையினரின் மதக் கோட்பாடுகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது. ஊராம் சொத்தை கொள்ளையடிக்கும் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் கழக தலைவர்களின் வீட்டை நிலத்தை வக்ப் வாரியம் கையகப்படுத்தினால் என்ன செய்வது என்ற அந்த அச்சமோ


vbs manian
மார் 27, 2025 17:43

திடீர் என்று அறிவாலயம் இடம் வக்ப் போர்டுக்கு சொந்தம் என்று சொன்னால் என்ன செய்வார்கள்.


M Ramachandran
மார் 27, 2025 17:29

உம்முடையா ஆவெளியையென சரியாக பாக்க துப்பில்லை அடுத்த எலையில் தொட்டு விறல் விட்டு பார்க்க கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை