உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்!

அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: ''உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று (ஏப்ரல் 11) பிரதமர் மோடி சென்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: காசி எனக்குச் சொந்தமானது, நான் காசியைச் சேர்ந்தவன். கடந்த 10 ஆண்டுகளில், வாரணாசியின் வளர்ச்சி புதிய வேகத்தை எட்டியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=98d9jh0f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவை இன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டங்களால் எளிதாக்கப்படும். அதிகாரத்தை விரும்புபவர்கள் (எதிர்க்கட்சிகள்) தங்கள் குடும்ப நலன்களை மட்டும் மேம்படுத்துகின்றன. ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகிறோம்.இன்று, காசிக்குச் செல்பவர்கள் அனைவரும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பாராட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு சிகிச்சை இலவசம் என்பது எனது உத்தரவாதம். இன்று, டில்லி மற்றும் மும்பையின் பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்துள்ளன. இதுதான் வளர்ச்சி.உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், நாட்டின் கால்நடை வளர்ப்பு சகோதரர்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Thetamilan
ஏப் 11, 2025 17:50

ஏற்றுமதி ?


Oviya Vijay
ஏப் 11, 2025 15:32

அதிக வடை உற்பத்தி செய்யப்படும் நாடும் கூட...


vivek
ஏப் 11, 2025 16:19

உனக்கு இன்று மட்டும் ஒரு ஊறுகாய் பாக்கெட் இலவசம்


GMM
ஏப் 11, 2025 15:13

அதிக பால் உற்பத்தியில் இந்தியா . மகிழ்ச்சி. சுயாட்சி கோரும் மாநிலம் தனது உணவு, பால் தேவையை பூர்த்தி செய்து உள்ளதா. ? அதிக பால் உற்பத்தியை நிலைப்படுத்த வாக்காளர் ஆடு, மாடு வளர்ப்பை வாக்களிக்க கட்டாயம் ஆக்க வேண்டும். அல்லது மாடு வளர்த்தால் , இரு வாக்குரிமை தர வேண்டும். திராவிடம் இதனை இழி தொழிலில் பட்டியல் இட்டு விட்டது. ?


Bhaskaran
ஏப் 11, 2025 15:02

இந்த பெருமைக்கு காரணமானவர்


chennai sivakumar
ஏப் 11, 2025 15:33

Thiru kurian milkman of india. அவருடைய asthivaaraththil பில்டிங் கட்டுகிறார்கள்


புதிய வீடியோ