உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு தேவை கூட்டாளிகள், போதகர்கள் அல்ல: ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு தேவை கூட்டாளிகள், போதகர்கள் அல்ல: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், பரஸ்பர ஆர்வத்தையும் ஐரோப்பிய நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்,'' எனக்கூறிய நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ''எங்களுக்கு கூட்டாளிகள் தான் தேவை; போதகர்கள் அல்ல,'' என, தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், ஐரோப்பாவிடம் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:இந்த உலகில் கூட்டாளிகளை தான் நாங்கள் தேடுகிறோம்; போதகர்களை அல்ல. குறிப்பாக, தாங்கள் கூறுவதை உள்நாட்டில் செயல்படுத்தாமல், மற்ற நாடுகளுக்கு போதிப்பவர்கள் எங்களுக்கு தேவையில்லை. ஐரோப்பாவில் சில நாடுகள் இன்னும் அந்த பிரச்னையுடன் போராடி வருகின்றனர். சிலர் மாறிவிட்டனர்.எங்கள் பார்வையில், நாம் ஒரு கூட்டாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், சில புரிதல்கள் இருக்க வேண்டும்; சில உணர்திறன் இருக்க வேண்டும்; பரஸ்பர ஆர்வமும் இருக்க வேண்டும்; உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர வேண்டும்.ரஷ்யாவின் யதார்த்தத்தை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது.வளங்களை வழங்குபவர் மற்றும் வளங்களை நுகர்பவர் என்ற முறையில், இரு நாடுகள் இடையே நல்ல புரிதல் உள்ளது.ரஷ்ய யதார்த்தத்தை நாங்கள் ஆதரிப்பது போல, அமெரிக்க யதார்த்தத்தையும் ஆதரிக்கிறோம். கருத்தியல் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தாமல், பரஸ்பர நலன்களை கண்டறிவதே அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சிறந்த வழி.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பாமரன்
மே 05, 2025 12:11

அருமையான பேச்சு... இந்த மாதிரி பேசுற வங்கிகள கம்பெனி விட்டு வைக்காதே... பார்ப்போம்


மோகனசுந்தரம் லண்டன்
மே 05, 2025 09:52

ஒரு வெளி உறவுத் துறை அதிகாரியை திரு நரேந்திர மோடி எவ்வளவு அருமையாக பயன்படுத்திக் கொண்டு உள்ளார். இவர்கள் அனைவரும் நம்முடைய நாட்டிற்காக உழைப்பவர்கள். அவர்கள் வாழ்க வளமுடன்.


அப்பாவி
மே 05, 2025 08:21

இப்பிடி பேசிட்டு நாளைக்கே அமெரிக்கா, ஐரோப்பான்னு டூர் போயிடுவாரு.


Barakat Ali
மே 05, 2025 06:06

ரஷ்யாவிடம் இருந்து நாம் மேற்கொள்ளும் என்னை இறக்குமதி விஷயத்திலும் சூடாக அதே சமயம் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகப் பதில் கொடுத்தார் .....


Barakat Ali
மே 05, 2025 05:39

பாராட்டுக்கள் நன்றியுடன் ...... நியாயமான பேச்சு ....... அளந்தெடுத்த பேச்சு ..... இப்படிப்பேச நமது முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் யாருக்கும் துணிவிருந்ததில்லை ....... மீண்டும் பாராட்டுக்கள் .....


Kasimani Baskaran
மே 05, 2025 03:58

புது யுகத்தில் பாரதம் தனது வழியை தானே தேர்ந்தெடுத்து இயங்குவது சிறப்பு.


Thangavel
மே 05, 2025 01:38

வாத்தி... மாஸ்!!!! எப்படி பேச வேண்டும் என்று நாம் இவரிடம் கற்று கொள்ள வேண்டும்!!!!


மீனவ நண்பன்
மே 05, 2025 01:18

இந்தியா எந்த நாட்டின் நன்கொடையிலும் வாழவில்லை ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை