உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு ஒன்றல்ல, பல மொழிகள் தேவை; பவன் கல்யாண் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு ஒன்றல்ல, பல மொழிகள் தேவை; பவன் கல்யாண் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; நம் நாட்டுக்கு இருமொழிகள் பத்தாது, பல மொழிகள் அவசியம் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார்.ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் காக்கிநாடாவில் நடைபெற்றது. இதில் துணை முதல்வரும், கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது; நாட்டுக்கு இரண்டு மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. மொழியியல் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு மட்டும் அல்லாமல், அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும். நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது. தமிழக அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கின்றனர். சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர் என்றே என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? இது என்ன வகையான தர்க்கம்?இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

baala
ஏப் 14, 2025 11:02

சிலர் இங்கு கருத்து போடுவது mattume வேலை போல உள்ளது


Ramesh Sargam
மார் 15, 2025 20:57

தமிழகத்திற்கு பல மொழிகள் தேவை, ஒரே ஒரு மொழியைத்தவிர... ஆம், அந்த fruit language வேண்டாம்.


Balasubramanian
மார் 15, 2025 19:58

செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரதியார் பாடிய பாரதம் எங்கே? செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று இருந்த இந்த தமிழ் நாட்டை அதனை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவரை மாலையிட்டு மரியாதை செய்யும் தமிழகத்தின் பாரம்பரியம் பண்பாடு மற்றும் ஆனமீகத்தை அழிக்கும் கூட்டம் இன்னும் ஆட்சியில் இருப்பதை மக்கள் எவ்வாறு சகிக்கின்றனர்? நெஞ்சு பொறுக்குதில்லையே!


T.sthivinayagam
மார் 15, 2025 14:15

பாஜாகாவுக்கு ஏற்ற தலைவர் பள்ளிகள் பல மொழிகள் கற்று கொடுக்க அல்ல கணிதம் அறிவியல் புவியியல் வரலாறு மருத்துவம் பொறியியல் என்ற அறிவு சார்ந்த பாடம் படிக்க என்பதை அவருக்கு வாக்களித்த மக்கள் தான் எடுத்து கூற வேண்டும் மக்கள் அனைவரும் கூறுகிறார்கள்


vivek
மார் 15, 2025 14:57

மக்கள் கூறுகின்றனர் ஒருபக்கம் இருக்கட்டும்....உன் சொந்த மூளையை வைத்து எப்போது கருத்து போடுவாய் என்று உன் குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்கிறார்கள்...


Mr Krish Tamilnadu
மார் 15, 2025 13:33

தெலுங்கை மையமாக வைத்து ஏன், தெலுங்கானா உருவானது? ஆந்திரவாக இருந்த போது அன்பு பண்பு பேணவில்லையா? வீட்டுக்குள் ஒருவரை அனுமதிப்பது வேறு, வெளியில் அனைவரோடும் பழகுவது வேறு. ரொம்ப டீப்பா ஒரு சில விசயங்கள் ஒத்து வராது. அதற்கு தான் எல்லை, தா லிமிட். ஆழமாக யோசித்தால் தான் புரியும்.பொது இடங்களில் தமிழ், இந்தி சேர்ந்து வருகிறது இப்போது. பிறகு அரசு விசயங்களில் தமிழ் மொழி மாற்றம் தவறாக வரும். பிறகு கூடுதல் செலவு, ஒரே செலவு என ஒரே தேர்தல் போல், ஒரே மொழியாகி விடும். நாம் கருத்துகளை இந்தியில் பதிவிட வேண்டி வருது. சிந்தனை கருத்துகளுக்கு யோசிப்பை விட மொழி மாற்றத்திற்கு மெனகெட வேண்டும்.


Svs Yaadum oore
மார் 15, 2025 14:07

தெலுங்கை மையமாக வைத்து தெலுங்கானா உருவாகவில்லை ....இங்குள்ளது போல மொழியை வைத்து ஆந்திர தெலுங்கானா அரசியல்வாதிகள் கேவல அரசியல் செய்வது கிடையாது ..வரலாறு தெரிந்து பேசலாம் ..ஹைதெராபாத் மக்களுக்கு ஹிந்தி தெரியும் ... ஆந்திர அரசு பள்ளிகள் அனைத்தும் CBSE பள்ளிகளாக மாற்றம் ...


Svs Yaadum oore
மார் 15, 2025 13:14

இந்த விடியல் திராவிடனுங்க நோக்கம் ஹிந்தி எதிர்ப்பு சமஸ்க்ரித எதிர்ப்பு என்ற பெயரில் இங்குள்ள தமிழ் கலாச்சாரம் சைவ சமய கலாச்சாரம் ஹிந்து கலாச்சாரம் அழிப்பது .... அதனாலதான் ஹிந்து என்றால் திருடன் என்று அர்த்தம் சொன்னது ....ஏற்கனவே மத சார்பின்மை பள்ளி பாட திட்டம் வைத்து பள்ளியில் தமிழை அறவே ஒழித்து விட்டார்கள் .... இப்பொது மாநில பாட திட்டத்தில் எவனுக்கும் ஒழுங்காக தமிழ் எழுத படிக்க தெரியாது ....மிச்சம் இருக்கும் தமிழையும் ஹிந்தி எதிர்ப்பு என்று முக மூடி போட்டுகொண்டு மொத்தமாக தமிழ் கலாச்சாரத்தை அழிக்கத்தான் விடியல் திட்டம் போடுவது ...


Svs Yaadum oore
மார் 15, 2025 13:01

இந்த விடியல் ஹிந்தி எதிர்ப்பு சமஸ்க்ரித எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் ஹிந்து மதம் எதிர்ப்பு ...வேற ஒரு புண்ணாக்கும் கிடையாது .....உருது அரபி லத்தீன் மொழி என்றால் மட்டும் விடியலுக்கு மத சார்பின்மையாக கண்ணில் கண்ணீர் வடியும் ..இதுதான் விடியலின் சமத்துவம் சகோதரத்துவம் மத சார்பின்மை சமூக நீதி ...


Svs Yaadum oore
மார் 15, 2025 12:57

ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் ஏராளமான நிதி ஒதுக்கி அதன் வளர்ச்சிக்கு மெனக்கெடும் மத்திய அரசு, சம்ஸ்கிருதத்திற்கு நேர்ந்த கதி தமிழுக்கோ, மற்ற மொழிக்கோ ஏற்படாமல் இருக்க மொழி வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் என்ன செய்ததாம் என்று கேள்வி ??....ரொம்ப யோக்கியனுங்க மாதிரி அடுத்தவனை கேள்வி கேட்பது??..இந்த சமஸ்க்ரித பல்கலைகள் ஆரம்பித்தது மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது ....அப்பறம் எதுக்கு விடியல் அவர்களுடன் கூட்டணி?? ...காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விடியல் வெளியேற வேண்டியதுதானே?? ...விடியல் தமிழ் நாட்டில் தமிழ் வளர்க்க என்ன செய்தது?? ....தஞ்சை தமிழ் பல்கலை தரம் தேசிய தரவரிசை பட்டியலில் தரைமட்டத்தில் உள்ளது ...சில ஆண்டுகள் முன் தர வரிசை பட்டியலில் இருந்தே நீக்கப்படும் நிலைமையில் இருந்தது தஞ்சை தமிழ் பல்கலை .....இதுக்கு விடியல் என்ன செய்ததாம் ??.... தமிழே சொல்லி கொடுக்காத உருது பள்ளியை மக்கள் வரிப்பணத்தில் விடியல் அரசு நடத்துது .....அதுக்கு யார் நிதி கொடுத்தார்களாம் ??...


Sridhar
மார் 15, 2025 12:49

இவரை சந்திரபாபு நாய்டுவோடு வந்து தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் செய்ய சொல்லணும். கொங்கு நாட்டிலேயும் சில தென்பகுதிகள்ல இருக்குற தெலுங்கு கன்னட மக்களுக்கு இவங்க சொன்னா புரியும்.


Svs Yaadum oore
மார் 15, 2025 12:48

3 வது மொழியால் தாய்மொழிக்கு தமிழுக்கு அச்சுறுத்தலும் அழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தமிழக அரசின் அச்சத்திற்கு மத்திய அரசோ, அண்ணாமலையோ பதில் சொல்லவில்லையாம் .....இந்த கேள்வியை விடியல் திராவிடனுங்க அவனுங்க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் கேட்க வேண்டியதுதானே ....ரொம்ப யோக்கியனுங்க மாதிரி அடுத்தவனை கேள்வி கேட்பது .....பாண்டிச்சேரியில் நவோதய பள்ளியை பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது காங்கிரஸ் ஆட்சி ...பாண்டிச்சேரியில் தமிழ் அழிந்துவிட்டது ...அதனால் விடியல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டியதுதானே ...


முக்கிய வீடியோ