உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து, மே 19ம் தேதி பார்லிமென்ட் குழுவிடம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்க உள்ளார்.இந்தியா - பாக்., இடையே கடந்த மே 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மிஸ்ரிக்கு எதிராக சமூக வலைதளங்களில், 'ட்ரோல்' எனப்படும் கிண்டலான விமர்சனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.ஒரு சிலர் வரம்புகளை மீறி மிஸ்ரி, அவரது மகள் மற்றும் குடும்பத்தினரையும் குறிப்பிட்டு மிக மோசமான கருத்துகளை தெரிவித்தனர். விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான விமர்சனங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து, மே 19ம் தேதி பார்லி குழுவிடம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார். அப்போது அவர் இந்தியா - பாக்., இடையே ஏற்பட்ட மோதல் குறித்தும், பின்னர் போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து முழு விளக்கத்தை அளிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mr Krish Tamilnadu
மே 13, 2025 14:09

ஆப்கானுக்கும் இந்தியாவிற்கும் இடையே அரபிக்கடல் வராது. காஷ்மீரில் கடற்கரையை பார்க்க முடியாது, கடல் காற்று வாங்க முடியாது.


Tirunelveliகாரன்
மே 13, 2025 12:35

இந்திய திரு நாட்டின் பொறுப்பு மிகு அதிகாரி விக்ரம் மிஸ்ரி யின் மீது பொறுப்பற்ற முறையில் பேசுவது எந்த வகை அறிவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை