உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.கடந்த நான்கு நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3stan1cz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது. தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Arivazhagan Subramanyam
மே 11, 2025 18:13

இது என்ன கொடுமை... இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தம்...முதலில் அறிவிப்பவர் அமெரிக்க அதிபர்...ஷமே


haridoss jennathan
மே 11, 2025 17:53

போர் நிறுத்தத்திற்கு ஒத்து கொண்டு இருக்க கூடாது. ஹபீஸ் சயீத் & மசூத் அசார் ஆகியோரை நம்மிடம் ஒப்படைக்கும் வரை.மறுபடியும் அவர்களுடைய பலவீனங்களை சரி செய்து க்கொண்டு நம்மை வீழ்த்த அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி விட்டோம் .


sankaranarayanan
மே 11, 2025 11:34

பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று மே 11 ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர் ஒரு சில இடங்களில் திரும்பவும் பாகிஸ்தான் வாலாட்டி உள்ளது இப்படித்தான் ஸ்ரீலங்காவின் அரசு படை ஈழத்ததமிழர்கள் வாழும் இடத்தில் சண்டையின்போது போர் நிறுத்தம் என்று கூறிய ஸ்ரீலங்கா அரசு திடிரென்று தமிழர்கள் வாழும் இடத்தில் குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தது அதனால் இந்தியா சற்றே உஷாரா இருக்க வேண்டும் போர் நிறுத்தம் துன்று ஏமாற்றி பாகிஸ்தான் திம்ப விஷமம் செய்தால் பாகிஸ்தானில் புண் பூண்டு இல்லாமல் இந்திய ராணுவம் அழித்துவிடவேண்டும் நாம் சும்மா கூடாது


P Ramasamy
மே 11, 2025 11:06

போர் நிறுத்தத்திற்கு ஒத்து கொண்டு இருக்க கூடாது. ஹபீஸ் சயீத் & மசூத் அசார் ஆகியோரை நம்மிடம் ஒப்படைக்கும் வரை


Kasimani Baskaran
மே 11, 2025 10:26

தண்ணீரை விட மாட்டோம் - குறைந்தபட்சம் தண்ணீர் விடும் நேரத்தை அறிவிக்க மாட்டோம் என்று சொன்னது சூப்பரோ சூப்பர். பாக்கிகள் இதன் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது ஓவரான எதிர்பார்ப்பு. பொறுத்திருந்துதான் அடிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை