உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவது ஆக.,25 முதல் நிறுத்தம்: இந்தியா போஸ்ட்

அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவது ஆக.,25 முதல் நிறுத்தம்: இந்தியா போஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிய வரி விதிப்பு காரணமாக வரும் ஆக.,25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அதேபோல, கடந்த ஜூலை 30ம் தேதி அமெரிக்கா வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 'ரூ.70 ஆயிரம் (800 டாலர்) மதிப்பு வரையிலான சரக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு திரும்பப் பெறப்படுகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி முதல், அனைத்து தபால் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். சுமார் ரூ.9,000 மதிப்புள்ள (100 டாலர்) பரிசுப் பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும்,' என தெரிவித்திருந்தது. மேலும், ஆக., 25க்குப் பிறகு அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் தபால் பார்சல்களை அமெரிக்க விமானங்களில் ஏற்றிச் செல்ல அனுமதியில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், வரும் ஆக.,25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா போஸ்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:ஆக., 25 முதல் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.9,000 (100 டாலர்) மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தவிர்த்து, அமெரிக்காவுக்கான அனைத்து வகையான பார்சல்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே பார்சல்களை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம்.வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு தபால் துறை மிகவும் வருந்துகிறது. மேலும் அமெரிக்காவுக்கான முழு சேவைகளையும் விரைவில் மீண்டும் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்துள்ளது. இதேபோல, ஆஸ்திரியா, பிரான்ஸ் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கான தபால் பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ManiMurugan Murugan
ஆக 23, 2025 23:41

உலக நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து ஒன்று சேருவது வரவேற்க்க வேண்டும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறப்பு உண்டு அவரவர் உழைப்பு ல் முன்னேருகிறார்கள் அமெரிக்கா தாந்தான் எல்லாம் எளபதுப் போல் நடப்பது தவறு


ديفيد رافائيل
ஆக 23, 2025 22:41

இதை தான் எதிர்பார்த்தேன். இதே போல ஒவ்வொரு நிறுவனங்களும் அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவதை நிறுத்த வேண்டும்......


GMM
ஆக 23, 2025 21:03

இழப்பை ஈடு செய்ய வேண்டும். அனைத்து அரசு துறை, நீதிமன்றம், அரசு உதவி பெறும் நிறுவனம் கட்டாயம் இந்தியா போஸ்ட் பயன்படுத்த வேண்டும். பதிவு, ஸ்பீடு போஸ்ட் மட்டும். முகவரி இல்லாதவருக்கு போஸ்ட் பாக்ஸ் எண் ஆண்டு குறைந்த வாடகையில் தர வேண்டும். சொந்த வீடு இல்லாத நபருக்கு இருப்பிட முகவரி போஸ்ட் மாஸ்டர் கட்டண அடிப்படையில் வழங்க வேண்டும். எல்லா கிராமமும் போஸ்ட் ஆபீஸ் வசதி பெற வேண்டும்.


அப்பாவி
ஆக 23, 2025 20:42

100 டாலருக்கு 8700 ரூவாயே அதிகம். இவிங்க 9000 ரூவா போட்டு உருவிடறாங்க.


தஞ்சை மன்னர்
ஆக 23, 2025 20:38

நஷ்டம் அவர்களுக்கு அல்ல அரசியல் விளையாட்டுக்கு அரசு அமைப்பு பலியாக வேண்டாம்


vivek
ஆக 24, 2025 07:15

உன் குப்பை கருத்து வேஸ்ட்


aaruthirumalai
ஆக 23, 2025 19:45

இது பத்தாது. நம்மால் முடியும்.


joe
ஆக 23, 2025 18:31

அமெரிக்க டாலர் வேண்டாம் .அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வங்கிகளில் உள்ள அக்கவுண்ட்டை தொழிலதிபர்கள் withdraw செய்து ,ஐரோப்பிய யூனியன் உள்ள நாடுகளுக்கு மாற்றி ஏற்றுமதி செய்யலாம் .சீனா இது போன்ற பாதையில் மட்டும் நீண்ட காலமாக ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பில் நிரந்தரமாக உள்ளது .அதனால்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் சீனாவை எதிர்க்க முடியவில்லை .அமெரிக்க டாலரின் மதிப்பே ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுழற்சியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது .


சின்னப்பா
ஆக 23, 2025 18:11

அப்படிப் போடு, போடு போடு! அப்படிப் போடு அமெரிக்கன்களை!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை