அமெரிக்காவில் தோவலுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டு: இந்தியா நிராகரிப்பு
பஞ்சாபை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன், சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 2019 ல் மத்திய அரசு இதனை தடை செய்தது. அவரை பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவரை மத்திய விசாரணை அமைப்புகள் தேடி வருகின்றன.அமெரிக்காவில் வசிக்கும் இவரை 2023ல் கொலை செய்ய சதி நடந்தது. இந்த விவகாரத்தில் நிகில் என்பவர் கைதானார். இது குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பன்னூன், கொலைக்கான சதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறியிருந்தார்.இவர்களுக்கு டில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் வாயிலாக சர்வதேச தபால் வாயிலாக சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இது குறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,'' இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். தள்ளுபடி செய்கிறோம். இது குறித்த எங்களின் நிலைப்பாடு இதுதான்,'' எனக்கூறியுள்ளது.