உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், '' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்நிலையில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான ஈரானுக்கு நேற்று சென்றார். அவருடன் ராணுவ தளபதி சையத் அசீம் முனிரும் சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kksr1194&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதலில், அந்நாட்டு தலைவர் அயதுல்லா சையத் அலிகமேனியை சந்தித்து ஷெரீப் பேச்சு நடத்தினார். பின்னர், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் ஆலோசனை நடத்தினார். இரு தலைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் பிரச்னை, நதிநீர் பகிர்வு, வர்த்தகம் என நீண்டகாலமாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பினோம்.''இப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்கள் அமைதி வாய்ப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நேர்மையாகவும், தீவிரமாகவும் எடுத்துக் காட்டுவோம்,” என்றார்.இது தொடர்பாக டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் குறித்த அணுகுமுறை என்பது இரு தரப்பிலானது என்ற நமது நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடைபெறாது என்பதை மீண்டும் உறுதியாக தெரிவிக்கிறேன். பயங்கரவாதம் குறித்த கவலைப்படும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டிடம் அளித்த பயங்கரவாதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்படும். காஷ்மீர் குறித்து இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தை என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்து மட்டுமே பேசப்படும்.சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை கைவிடும் வரை நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 30, 2025 11:02

அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னால் பேச்சு வார்த்தை நடத்துவோம்!


N Sasikumar Yadhav
மே 30, 2025 14:12

ஆஹா அற்புதம் உங்க பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய பாசம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது


வேணு
மே 30, 2025 09:08

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு 70 ஆண்டுகளாக இப்படி பேசிய நமது அரசியல்வாதிகளுடன் குளிர் காய்ந்தார்கள் போதும் போதும் பேச்சுவார்த்தை காஷ்மீர் திரும்ப தர வேண்டும் பாகிஸ்தானை நம்ப கூடாது நம்பினால் நமது நாட்டுக்கும் மக்களுக்கும் தான் இழப்பு


Ramesh Sargam
மே 29, 2025 21:58

பாக்கிஸ்தான் முதலில் அவர்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் கூடாரங்களை அழித்துவிட்டு, உயிரோடிருக்கும் பயங்கரவாதிகளை மொத்தமாக போட்டுத்தள்ளிவிட்டு, பிறகு பேச்சு, வார்த்தை இவற்றுக்கு வரவேண்டும்.


SENTHIL NATHAN
மே 29, 2025 20:40

பிச்சைக்காரன் கருத்தை யார் ஏற்பார்கள்? பாகீசுதான் ஒரு பிச்சைக்கார நாடு. அவனுடய இடத்தை இந்தியா அவனுக்கு காண்பித்து விட்டது. கதறட்டும் பன்னிப்பசங்க


chinnamanibalan
மே 29, 2025 19:32

தீவிரவாதிகளை வளர்த்து விடுவதில் உலகின் முன்னணி நாடாக இருந்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக அதன் ஆட்சியாளர்கள் கூறுவது அப்பட்டமான பொய் பித்தலாட்டம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 29, 2025 18:54

இந்தியாவின் பதில்கள் நச் என்று இருக்கிறது. பாகிஸ்தான் கூறும் மூன்று பிரச்சனைகளையும் ஆரம்பித்தது அவர்கள்தான். 1948 இல் காஷ்மீரை ஆக்ரமித்து காஷ்மீர் பிரச்சனையை ஆரம்பித்தது அவர்கள்தான், நதிநீர் பகிர்வில் இரத்தத்தை கலந்தது அவர்கள்தான், இருநாட்டு வர்த்தக உறவை துண்டித்ததும் அவர்கள்தான். இனி காலில் விழுந்தாலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது.


sankaranarayanan
மே 29, 2025 18:45

எல்லாமே எங்குமே தண்ணீர் படுத்தும் பாடுதான் முக்கியம் திராவிட மடல் அரசியலில் டாஸ்மாக் தண்ணீர் தெருவில் ஒருகிறது இனி நதியிலும் ஓட ஆரம்பித்து விடும் டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது அதற்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாது. அதேபோன்றுதான் தீவிரவாதத்தால் பாகிஸ்தான் அழிய தொடங்கிவிட்டது அங்கே நதிகளில் தண்ணீர் கிடையாது ஆனால் நதிகளின் கரைகளில் தீவிரவாதிகளின் கூடாரங்கள்தான் அதிகமாகி வருகின்றன


Naga Subramanian
மே 29, 2025 18:40

சபாஷ் மாமாவுக்கு காஷ்மீரை கொடுத்துவிட்டால், சிறிது காலத்துக்கு அமைதியாக சென்று விடுவார். அதன் பிறகு, பஞ்சாபையும் கொடுத்து விடுங்கள் என்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருவார். ஆக, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அமைதியாக இருக்க வேண்டி, அவர் பேச்சு வார்த்தைக்கு வருவார். இதெல்லாம் சரிப்படாது. பேசாமல் போட்டு தாக்கினால்தான் சரி வரும்.


Suresh Velan
மே 29, 2025 18:37

இந்திய வெளியுறவு துறை தெரிவித்த கருத்து சூப்பரோ சூப்பர் . இது மாதிரி ஒரு ஸ்டராங் ஆன இந்திய அரசை 100 ஆண்டுகளுக்கு நாம் பார்க்கிறோம் . வாழ்க மோடி


மீனவ நண்பன்
மே 29, 2025 20:08

சுதந்திரம் வாங்கி 78 வருஷங்கள் தானே ஆகிறது ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை