உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகள்; பெயர், போட்டோ வெளியிட்டு இந்தியா அம்பலம்!

பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாக்., ராணுவ அதிகாரிகள்; பெயர், போட்டோ வெளியிட்டு இந்தியா அம்பலம்!

புதுடில்லி: பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பெயர்கள் மற்றும் போட்டோவை இந்தியா வெளியிட்டது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். அப்போது, பாக்.,கின் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலை வில் உள்ள முரிட்கேயில், நம் ராணுவத்தினர் நடத் திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=inbr10rl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் பலத்த பாதுகாப்புடன் நடந்தன. அதில், பாக்., ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக அந்த பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர் பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.இந்நிலையில், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பெயர்கள் மற்றும் போட்டோவை இந்திய ஆயுதப் படைகள் வெளியிட்டது.* லெப்டினன்ட் ஜெனரல்- பயாஸ் ஹுசைன் ஷா, லாகூர் IV கார்ப்ஸின் தளபதி.* லாகூர் 11வது காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ்* பிரிகே முகமது புர்கான் ஷபீர்* டாக்டர் உஸ்மான் அன்வர், பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்* மாலிக் சொஹைப் அகமது பெர்த், பஞ்சாப் மாகாண சட்டமன்ற உறுப்பினர்.பாகிஸ்தான் நீண்ட காலமாக எந்த வகையான பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை என கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாக்., ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதால், பயங்கரவாதிகளுடன் பாக்., ராணுவத்துக்குள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

sasikumaren
மே 13, 2025 13:29

நமது நாட்டில் இருக்கும் துரோகிகளை முதலில் ஒழித்து கட்ட வேண்டும் பிறகு எதிரி தீர்த்து கட்டுவோம்


theruvasagan
மே 12, 2025 17:25

இந்த ராணுவ உடையில் திரியும் பயங்கரவாதிகளுக்கும் ஒரு நாள் அந்த நாடு அஞ்சலி செலுத்தும் வாயப்பை நமது ராணுவம் சீக்கிரம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.


Sridhar
மே 12, 2025 15:17

அட அவங்கெல்லாம் பயங்கரவாதிகளே இல்லேன்னு சொல்லிட்டுருக்கோம்,.....


Suppan
மே 12, 2025 15:02

பாக்கிஸ்தான் பிரிவினைக்கு காரணமான , அதை வெகுவாக ஆதரித்த காய்தே மில்லத்தின் பெயரில் ஒரு நூலகமாம்.


RAJ
மே 12, 2025 13:53

தேசவிரோதிகளை எப்போ அர்ரெஸ்ட் பண்ணபோறீங்க??


Anand
மே 12, 2025 13:20

அங்குள்ள ராணுவமே தீவிரவாத இயக்கம் தான்...


Sivagiri
மே 12, 2025 12:18

ஆக , இன்னும் நிறைய - அஜித்தோவல்-கள் தேவை இருக்கு . . . குறைந்தது ஐநூறு பேரையாவது உருவாக்க வேண்டியது அவரது பொறுப்பாகி விட்டது . . .


Ganapathy
மே 12, 2025 12:17

அருமையான நடவடிக்கை.


vels
மே 12, 2025 12:08

மத வாதம் எவ்வளவு தீங்கு என்பதை உணர்ந்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்


Rathna
மே 12, 2025 11:54

ஒரு மத வெறி கொண்ட நாட்டை அடக்கியதில் உள் நாட்டுக்குளேயும் அவர்களின் உறவுகள் ரத்த கண்ணீர் விடுவது, அலம்புவது கேட்கிறது. ஸுடோ செகுலர் கூட்டங்கள் - ஹவாலா, தங்க கடத்தல், போதை வியாபாரம், சட்ட விரோத பெண்கள் தொழில் மூலம் தனக்கு வருகின்ற கட்டிங் குறைந்து போகுமோ என்று அழுகிறது.


சமீபத்திய செய்தி