உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டது.'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலுக்கு பின், ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், உள்நாட்டில் போர் விமானங்களை தயாரித்து வரும் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக அந்நிறுவனத்துடன், 62,370 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், நம் ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, 2027 - 28ம் நிதியாண்டு முதல் நம் ராணுவத்துக்கு போர் விமானங்கள் வழங்கும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் துவங்கும். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள், 97 போர் விமானங்களை நம் விமானப்படைக்கு அந்நிறுவனம் தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வகை போர் விமானங்களில், 64 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இதனால், 105 உள்நாட்டு நிறுவனங்களுக்கு நேரடி பணி வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது, பல மாதங்களாக வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட பதட்டங்களுக்கு பிறகு அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தசூழலில், தேஜஸ் போர் விமானங்களுக்கான இன்ஜினை உலக அளவில் போர் விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் GE AERO SPACE நிறுவனத்திடமிருந்து வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், விநியோகங்கள் 2027ல் தொடங்கி 2032க்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக தயாரிக்கப்படும் 97 தேஜஸ் போர் விமானங்கள், நீண்ட காலமாக சேவை செய்த மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

மணிமுருகன்
நவ 08, 2025 23:46

அருமை இருப்பினும் ஒரு முறை சோதித்து பார்த்து கொள்வது நல்லது அனைத்து இன்ஜின்களையும்


Rathna
நவ 08, 2025 15:59

2024-25 இல் இந்திய தயாரிப்பு MADE IN INDIA ராணுவ கொள்முதல் 168922 கோடி ரூபாய். அது மொத்த ராணுவ கொள்முதலில் 81% ஆகும். இந்த புள்ளி விபரம் சில மூளை வளராத கூட்டங்களுக்கு உதவியாக இருக்கும். ராணுவ அமைச்சர் ராஜ் நாத் சிங் இதில் மிக தீவிரமாக இருக்கிறார்.


Appan
நவ 08, 2025 09:51

DRDO வின் கீழ் பெங்களூரில் GTRE என்ற ரிசர்ச் லேப் உள்ளது. இது போர் விமானங்களுக்கு தேவையான Gas Turbinae கண்டுபிடிப்புகளை செய்யணும். காங்கிரஸ் ஆட்சியில் இந்த லேப்புக்கு அமைச்சருக்கு வேண்டியவரை டைரக்டர் ஆக நியமித்தார்கள். அவரோ பெரும் ஊழலில் ஈடுபட்டு ஓட்டலில் பிடிபட்டார். பெரும்பாலான DRDO லேப்கள் திறம்பட செயல்படுகிறது. இதன் தாக்கம் தான் சிந்துர வெற்றி . GTRE வேலை கடினமானது. காங்கிரஸ் ஆட்சியில் கமிஷனுக்காக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்தார்கள். இதனால் இந்திய கண்டுபிடிப்புகல் வளரவில்லை. இந்திய முக்கியமான ரெண்டு துறைகளில் இன்னும் பின் தங்கி இருக்கிறது. semiconductor, precision engineering. . மோடி ஆட்சி இத்துறைகளில் அதிக முதலீடுகள் செய்யணும்.


Gokul Krishnan
நவ 08, 2025 09:22

நேற்று எலன் மாஸ்கின் ஸ்டார் லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இன்று தேஜஸ் விமானம் என்ஜின்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் .ரெண்டுமே தனி நபர் தகவல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள் அடக்கிய மிக முக்கியமான விஷயம்


Gokul Krishnan
நவ 08, 2025 11:07

நான் பதிவு செய்த கருத்தில் எந்த தவறான தகவவால் அல்லது வார்த்தை கிடையாது


KOVAIKARAN
நவ 08, 2025 08:58

தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள் வாங்கியபின், அதைப்போலவே, விரைவில் நமது நாட்டியிலும் உற்பத்தி செய்ய நீண்டகால திட்டம் ஒன்றை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால், இதுபோன்ற மிகமுக்கியமான பாகங்கள், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் நமக்கு, எதிர்காலத்தில் இருக்காது. மோடி அவர்கள் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம், நம்புவோம்.


Barakat Ali
நவ 08, 2025 08:43

சுதேசிக்கொள்கை என்னாச்சு ???? டி ஆர் டி ஓ விஞ்ஞானிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் எதுக்கு வெட்டி சம்பளம் ????


N Sasikumar Yadhav
நவ 08, 2025 09:20

. DRDOவின் வேலை பாகிஸ்தானிய பங்களாதேச பயங்கரவாத கும்பலுங்களை அழித்து உலகத்திற்கு அமைதியை கொடுப்பது மட்டுமே


KRISHNAN R
நவ 08, 2025 08:42

டிரம்ப் அதன் மூலம் சர்வே செய்யலாம்


பாமரன்
நவ 08, 2025 08:19

அப்ப ஆத்மநிர்பர்பர்புர்புர் திட்டத்தின் கீழ் வர்றதா காங் அரசு கொண்டாந்த இந்த ப்ராஜெக்டுக்கு ... எல்லாத்துக்கும் காரணம் தான்...


sankaranarayanan
நவ 08, 2025 08:16

இப்போது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நிம்மதிதானே என்னும் என்னென்ன இந்தியா வாங்கவேண்டுமென்று அவர் நினைக்கிறாரோ தெரியவில்லை இனியாவது வரி விகிதத்தை பழைய மாதிரி கொண்டுவர முயற்சிப்பாரா


தியாகு
நவ 08, 2025 07:53

தேஜஸ் போர் விமானங்கள் வானில் பறக்கும்போது அருமையாக இருக்கும்


முக்கிய வீடியோ