உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: ''பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. ஒவ்வொரு இந்தியரின் லட்சியமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mtn9dmjl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0122வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டும் அல்ல. மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போது, நமது பாதுகாப்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது.

பயங்கரவாதம்

உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. இன்று ஒவ்வொரு இந்தியரின் லட்சியமும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை நமது படைகள் துல்லியமாக அழித்தன.

வனவிலங்கு பாதுகாப்பு

கடந்த 5 ஆண்டுகளில், கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 674 லிருந்து 891 ஆக அதிகரித்துள்ளது. இது ஊக்கமளிக்கிறது. விலங்கு கணக்கெடுப்பு பணி சவாலானது. இது 35,000 சதுர கி.மீ. பரப்பளவில் செய்யப்பட்டது, ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஊக்கமளிக்கிறது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.65 வயதான ஜீவன் ஜோஷி பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் போலியோவால் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து போராடினார். அவர் தனது வாழ்க்கையை கலைகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரது பணி கலைகளுக்கு மட்டுமல்ல, பக்திக்கும் உரியது. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதற்கு எடுத்துரைத்தார்.

பறக்குது கல்வியின் கொடி!

ஒரு காலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. தற்போது மத்திய அரசின் நடவடிக்கையால் நிலைமை மாறி உள்ளது. நக்சல்கள் கொடி பறந்த இடத்தில் தற்போது கல்வியின் கொடி உயர பறக்கிறது.மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் 95 சதவீத தேர்ச்சி உடன் தண்டேவாடா மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 12ம் வகுப்புத் தேர்வில், இந்த மாவட்டம் மாநிலத்தில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய மாற்றங்கள் நம் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்கின்றன.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajamani Lakshminarayanan
மே 25, 2025 16:29

மோடி போன்ற பிரதமரை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.


ram
மே 25, 2025 15:58

அதானி, அம்பானி சொத்து மற்றும் அரசியல்வாதி சொத்து ஆகியவற்றைக் கொண்டு உங்கள் பொருளாதாரத்தைக் கணக்கிடாதீர்கள்.


Barakat Ali
மே 25, 2025 23:51

உழைக்கிறவங்க அதிகம் சம்பாதிச்சு சந்தோசமா இருக்காங்க .... உங்களுக்கு அந்தக்கொடுப்பினை இல்லையோ ????


கவிகுமார்
மே 25, 2025 15:09

கூந்தல் கருப்பு... ஆஹா.. குங்குமம் சிவப்பு ஓஹோ...


Narasimhan
மே 25, 2025 14:50

பணக்காரர்கள் மேல்மேலும் பணம் குவிப்பது பொருளாதார வளர்ச்சி கிடையாது. நாட்டில் பசி பட்டினி அடியோடு என்று ஒழிகிறதோ அன்றுதான் ஒரு முன்னேறிய நாடு என்று எடுத்துக்கொள்ள முடியும். இந்தியாவை பொறுத்தவரை பெரிய கார்ப்பரேட்டுகளும் அரசியல்வாதிகளும் மட்டும்தான் பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்கின்றனர்


Padmasridharan
மே 25, 2025 13:14

இலஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களின் பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்த்தால் நன்றாக இருக்கும் அய்யா..


Ramesh Sargam
மே 25, 2025 12:31

இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது ஒரு சில தேசதுரோகிகளை தவிர்த்து. யார் அந்த தேசதுரோகிகள் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை