உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் வாங்கி குவிப்பதில் சீனாவை விஞ்சியது இந்தியா!

தங்கம் வாங்கி குவிப்பதில் சீனாவை விஞ்சியது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தங்கம் வாங்குவதில் சீனாவை விஞ்சியது இந்தியா என உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.தங்கம் விலை என்ன தான் உயர்ந்து கொண்டே போனாலும், வாங்குவது மட்டும் குறைந்தபாடில்லை. இதனை உறுதி செய்யும் வகையில், தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில், சீனர்கள் 165 டன் தங்கத்தை வாங்கி உள்ளனர். ஆனால் இந்தியர்கள் 248.3 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் (மூன்றாம் காலாண்டு) இந்தியாவின் தங்கத்திற்கான தேவை 18% அதிகரித்துள்ளது.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தான் காரணம்.இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில், சீனர்கள் 103 டன் தங்க நாணயங்கள் மற்றும் பார்கள் வாங்கிய நிலையில், இந்தியர்கள் 172 டன் தங்கம் பார், நாணயம் வாங்கியுள்ளனர். இவ்வாறு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து, உலக தங்க கவுன்சிலின், இந்திய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறியதாவது: ஜூலை மாதம் கடைசியில், தங்கம் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. செப்டம்பர் மாதம் பாதி வரை, அதிகரித்த வண்ணமே இருந்தது.தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு, அதிகமான பேர் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ravichandran m
நவ 01, 2024 13:50

எந்த வித வரியும் கட்டாமல் கிலோ கணக்கில் தங்கத்தை வாங்கி பதுக்கிவைக்கின்றார்கள் ஏழைகளின் வீட்டில் ஒரு கிராம் தங்கம் கூட இல்லை


karthik
நவ 01, 2024 16:25

வந்துட்டன்டா ஆனா ஊனா ஏழைகள் வீட்டில் ஒன்னும் இல்லை என்று..


karthik
நவ 01, 2024 09:28

இந்தியா இந்த வாரம் 213 டன் அடமானம் வைத்த தங்கத்தை 400 மில்லியன் டாலர் பணத்தை கட்டி திருப்பிகொண்டுவந்திருக்கிறது. 90 களில் காங்கிரஸ் ஆட்சியில் அடகு வைத்த தங்கம். மோடி பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை அவ்வளவும் மக்கள் வரிப்பணம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குளப்பிய அரசியல் வியாதிகள் 400 மில்லியன் பணம் கடனை கட்டி அடைத்திருக்கிறது இதை சொல்ல மாட்டார்கள். எந்த தமிழ் பத்திரிக்கையும் சொல்லாது.


தாமரை மலர்கிறது
அக் 31, 2024 23:25

பிஜேபி ஆட்சியில் இந்தியா பணக்கார நாடாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது புலப்படுகிறது.


SUBBU,MADURAI
அக் 31, 2024 18:46

Indian consumers significantly outspent China in the September quarter, purchasing 248 tonnes of gold worth Rs 2 lakh crores!


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 31, 2024 18:20

இதற்கு பல காரணங்கள் உண்டு. மக்களிடம் 1. அதிக வருமானம்/பணப்புழக்கம். 2. சேமிக்கும் ஆர்வம் அதிகரிப்பு. 3. அதிக லஞ்சம்/கறுப்புப்பணம். 4. வங்கிகளின் மீது நம்பிக்கையின்மை/பணவீக்கம். 5. பணமதிப்பில் வீழ்ச்சி. 6. தங்கத்தின் மீது மோகம். இப்படி பல.


முக்கிய வீடியோ