உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு குறித்த புதிய ஆதாரங்களுடன் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து இந்தியா புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலை தாக்குப் பிடிக்காத பாகிஸ்தான், அந்நாட்டு டி.ஜி.எம்.ஓ., மூலம் வேண்டிக் கொண்டதன் பேரில், இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது. இருப்பினும், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நேற்றிரவு தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியாவை மீண்டும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இந்தப் போர் நிறுத்த மீறலை இந்தியா அதி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நமது படைகள் எல்லையில் தீவிரமாக கண்காணித்து வருகிறது, எனக் கூறினார். இந்தநிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை (தீர்மானம் 1267) இந்தியா சந்தித்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க இருக்கிறது. இந்த வாரத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு பற்றிய புது ஆதாரங்களையும் இந்தியா சமர்ப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267 என்பது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம். இந்தத் தீர்மானம் பயங்கரவாதப் பணப்பரிமாற்றம், ஆயுதங்கள் பெறுவதை தடுக்க குழுவை அமைத்து செயல்படும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து, நிதி மற்றும் ஆயுத உதவிகளை தடுப்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Senthoora
மே 12, 2025 05:39

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை வளர்க்க பண உதவி செய்து அவர்களை வளர்த்துவிட்டதே இந்த அமெரிக்காதான், அதில் பாடம் கற்றது 9/11 இரட்டை கோபுர தாக்குதல்.


Bhakt
மே 12, 2025 00:03

UN is a Useless Organization


spr
மே 11, 2025 21:24

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் போன்ற பன்னாட்டு அமைப்புக்கள் அனைத்தும் பயன்தர இயலாத ஒன்றே எப்படி தமிழகம் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் பணத்தை திமுக அரசு அவர்களுக்கு ஒதுக்கிக் கொள்கிறதென அறிந்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லையோ அது போல பன்னாட்டு நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து நிதி உதவுவதிலிருந்தே அறியப்படுகிறது. அவை வல்லரசுகளின் கைப்பாவை "கடவுளை நம்பு ஆனால் சைக்கிளை பூட்டி வை" என்பதுதான் சரியான ஒன்று.மரியாதைக்காக அவற்றை அணுகலாம் மற்றபடி இந்தியா காஷ்மீரில் செய்தது போல பாகிஸ்தான் ராணுவத்தை கட்டுப்படுத்தி, பாகிஸ்தானில் நிலையான உண்மையான குடியாட்சியை உருவாக்கி பாகிஸ்தானை அறவே அழிக்கலாம்


Kasimani Baskaran
மே 11, 2025 20:41

கொல்லப்பட்ட தீவிரவாதிகளை புனிதர்கள் போல பல இராணுவ அதிகாரிகள் கடைசி மரியாதை கொடுத்து அனுப்பி வைத்ததே போதுமான ஆதாரம். அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.


Senthoora
மே 12, 2025 05:45

அமெரிக்க அழுத்தத்துக்கு, லிபிய மக்களின் நலனுக்காகவும் அப்போதைய அதிபர் மும்மர் கடாபி, அமெரிக்க டெல்டா விமானகுண்டுவெடிப்பை நடாத்திய குற்றவாளியை அமெரிக்காவுக்கு ஒப்படைத்து தனது மக்கள் நலனை காப்பாத்தினார், அதே பாகிஸ்தானும் அந்த 5 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைத்து சமரச உடன் படிக்கை செய்தால் எல்லாம் சரியாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை