உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா- ஐநா நெருங்கிய ஒத்துழைப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா- ஐநா நெருங்கிய ஒத்துழைப்பு

புதுடில்லி:பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவும், ஐநாவும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக ஐநாவின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உலக அரங்கில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்தியா ஒரு பக்கத்தில் சந்திரனில் இறங்குகிறது. மறுபக்கத்தில் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்பதற்கான புதிய வழிகளை உருவாக்குகிறது. இது குளோபல் சவுத் நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது. வளரும் நாடுகளுக்கான சவால்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை இந்தியா காட்டுகிறது. மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் புதுமைப்படுத்தி முதலீடு செய்து வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவும், ஐநாவும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. நமக்கு தேவையான தலைமையை இந்தியா வழங்கி வருகிறது. ஒரே குடும்பமாக உலகத்தின் உணர்வு இருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !