உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி மசூத் அசாரை கதறவிட்ட இந்தியா; 25 ஆண்டுக்கு பின் வீடு தேடி சென்று பழி தீர்த்தது

பயங்கரவாதி மசூத் அசாரை கதறவிட்ட இந்தியா; 25 ஆண்டுக்கு பின் வீடு தேடி சென்று பழி தீர்த்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில், 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மறுநாள், பீஹாரில் பிரதமர் மோடி பேசுகையில், 'தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு, தண்டனை தருவோம்' என, உறுதிபட தெரிவித்தார்.அவர் கூறியது போல், சரியாக 15வது நாள், பயங்கரவாதிகளின் கூடாரத்தில் துல்லிய தாக்குதல் நடத்தி, கதற வைத்து வருகிறது இந்தியா. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், ஆப்ரேஷன் சிந்துார் என, அதிரடியாக பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது இந்தியா.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lrot29ay&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள, 21 இலக்குகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. இதில் ஒன்பது இலக்குகள் நேற்று அதிகாலை நடந்த தாக்குதலில் சிதறடிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வசிப்பிடமான, பாகிஸ்தான் பகவல்பூரில் நடத்திய தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.''எனது குடும்பத்தில் 10 பேர், கூட்டாளிகள் நான்கு பேரை கொன்றுவிட்டார்களே... வருத்தம் இல்லை; விரக்தி இல்லை; அவர்கள் இறக்கவில்லை; தியாகிகள்' என, சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை கதற வைத்துள்ளது இந்தியா. அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் மனைவி, மற்றொரு மருமகள் என நெருங்கிய சொந்தங்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களையும், ராணுவ அதிகாரிகளையும் கொன்று குவித்தவன் மசூத் அசார். இன்று அந்த பயங்கரவாதியின் வீடு புகுந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், தாக்குதல் நடத்தியது நமது பாதுகாப்பு படை. இது ஒவ்வொரு பயங்கரவாதிக்கும், பாடமாக இருக்கும்.

விமானம் கடத்தல்

கடந்த 1999ம் ஆண்டு, டிச.,24ல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 'ஹர்கத் உல் முஜாகிதீன்' அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தில், 179 பயணியர் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர்.விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், விமானத்தில் இருந்த ஒருவரை குத்திக் கொன்றனர். கடத்தப்பட்ட விமானம், அமிர்தசரஸ், லாகூர், துபாய் மற்றும் பின்னர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு சென்றது.பணயக்கைதிகளாக இருந்த விமான பயணியரை காப்பாற்ற வேண்டும் எனில், அதற்கு ஈடாக, இந்திய சிறையில் இருக்கும் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவன் தான், இந்த மசூத் அசார்.

பார்லிமென்ட் தாக்குதல்

கடந்த 2000ம் ஆண்டில், 'ஜெயஷ்-இ-முகமது' என்ற பயங்கரவாத அமைப்பை, மசூத் அசார் நிறுவினான். 2001ம் ஆண்டு, டில்லி பார்லிமென்டில் நடந்த தாக்குதல், 2016ல், காஷ்மீர் பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019ல் புல்வாமா தாக்குதல் என, இந்திய மண்ணில் அரங்கேறிய கொடிய தாக்குதல்களுக்கு இவன் தான் முக்கிய காரணம்.இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்த, பாகிஸ்தான் அவனுக்கு அடைக்கலம் அளித்தது. அன்று இந்தியாவில் இருந்து, 'உயிர் பிச்சை' வாங்கிச் சென்றவனை, 25 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா தேடி பழி தீர்த்துள்ளது. முதல் கட்டமாக, 10 உறவினர்கள், நான்கு உதவியாளர்களை தீர்த்துக்கட்டியுள்ளது. தற்போது எங்கோ, பயத்துடன் பதுங்கி வாழும் மசூத் அசாரின், நாட்களும் எண்ணப்பட்டுள்ளன.

யார் இந்த மசூத் அசார்?

ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். கடந்த, 2000ல் அவர் துவக்கிய ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. நம் நாட்டின் பார்லிமென்டில், 2001ல் நடந்த தாக்குதல், 2016ல் பதன்கோட் விமான தளத்தில் நடந்த தாக்குதல், 2019ல் புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதல்களில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தான், மசூத் அசார்.கடந்த, 1994ல் இவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்வதற்காக, 1999ல், நேபாளத்திலிருந்து டில்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்திச் சென்றனர். அதில் உள்ள பயணியரை விடுவிக்க வேண்டும் என்றால், மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என பயங்கரவாதிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மசூத் அசார் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்வதாக பாகிஸ்தான் அரசு உறுதி அளித்தாலும், பாகிஸ்தானில் அவர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடி வருகிறார். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rathna
மே 14, 2025 19:06

பாகிஸ்தான் மத வெறி அரசு இவனுக்கு 14 கோடி இழப்பீடாக வழங்குகின்றது. இதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வழங்கிய $ 2.3 பில்லியன் கடன்.


Suresh Pu
மே 09, 2025 07:41

இவனை போன்ற மததீவிரவாதிகளை இவர் என அழைக்கவேண்டாம்


Karthik
மே 08, 2025 18:55

இவன் போன்றோருக்கு சாதகமாக நீதி வழங்குவதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்றே தோன்றுகிறது.


Ganesh Moorthy
மே 08, 2025 13:46

தயவுசெய்து இந்தக் குற்றவாளிகளுக்கு மரியாதை கொடுப்பதை நிறுத்துங்கள். பன்மை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சொற்களை ஒருமையில் பயன்படுத்தவும்.


AIY ST courier
மே 08, 2025 11:43

நாம் செய்த மிகப்பெரிய தவறு இவ்வளவு பெரிய பயங்கரவாதியை சிறையில் வைத்திருந்து தான். 3 நாளில் விசாரித்துவிட்டு தூக்கிலிட்டிலிருந்தால் விமானமே கடத்தப்பட்டுஇருக்காது...


V RAMASWAMY
மே 08, 2025 10:46

வருத்தம் என்னவென்றால் வீட்டில் இவர் இல்லாமல் போய்விட்டாரே என்று தான். காலம் வெல்லும், காலனும் வெல்வான், கெடுவான் கேடு நினைப்பான்.


Nagarajan Jayakumar
மே 08, 2025 10:19

நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் இஸ்ரேலிடமிருந்து இந்தியா நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காட்டுமிராண்டியும் ஒழிக்கப்படும் வரை, இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக இந்தியா இஸ்ரேலிய பாணி தாக்குதலைப் பயன்படுத்த வேண்டும்.


Nagarajan Jayakumar
மே 08, 2025 10:18

இந்த பயங்கரவாதி மசோத் ஆசாத் ஒழிக்கப்பட வேண்டும்.


Dharmavaan
மே 08, 2025 08:04

இவன் கொல்லப்படாதவரை வெற்றி என்று சொல்லக்கூடாது


Dharmavaan
மே 08, 2025 08:03

இவனுக்கெல்லாம் சட்டம் நீதி முறைகள் கூடாது பிடித்தவுடன் சுட்டு தள்ளியிருக்க வேண்டும் .இல்லையேல் பெரும் சேதம் ஏற்படும்


K V Ramadoss
மே 10, 2025 12:54

ஆமென்..


சமீபத்திய செய்தி