வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜெய்ஹிந்த்
புதுடில்லி: டிசம்பர் 10, 11ம் தேதிகளில் அரபிக்கடலில் பாகிஸ்தானின் கடலோர வான்வெளிக்கு அருகில் விமானப்படை பயிற்சியை இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில், அரபிக் கடலில் நடைபெற உள்ள பயிற்சி குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பயிற்சி டிசம்பர் 10 (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 11 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் இருந்து 70 கடல் மைல்கள் தொலைவில், பயிற்சி நடைபெற உள்ள இடம் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.இந்தப் பயிற்சி, பாதுகாப்பு மற்றும் அரபிக் கடலில் தயார்நிலையை மேம்படுத்துவதையும், வான்வழித் திறன்களை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது போன்ற பயிற்சியை நடத்துவது பிராந்திய விழிப்புணர்வை அதிகரிக்கும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜெய்ஹிந்த்