உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு

இன்று கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. பரபரப்பான சூழலில், டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக நடத்தியதற்கு முப்படைகளை பிரதமர் மோடி பாராட்டினார். பின்னர், இன்று (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்று முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishnamoorthy
மே 07, 2025 17:05

ஒன்றியம் என்றால் பிரிவினையென்று யார் சொன்னது?


ஆரூர் ரங்
மே 07, 2025 18:38

யூனியன் என்பது ஒன்றியம் என தவறாக விளக்கமளிக்கும் தனித் திராவிடநாடு கேட்டவர்களின் உள்நோக்கம் வேறெதுவும் இல்லை.


Asokan Hyderabad
மே 07, 2025 16:57

Be careful of Anti Indians Parties


R. SUKUMAR CHEZHIAN
மே 07, 2025 15:50

நம் நாட்டை ஒன்றியம் ஒன்றியம் என திரும்ப திரும்ப கூறி கொண்டு பிரிவினையை உண்டாக முயசிக்கும் திமுக, விசிக, வைகே போன்ற கட்சிகளை அழைக்காமல் இருப்பது நல்லது, இவர்களால் நம் நாட்டுக்கு ஒரு நன்மையும் இல்லை. தமிழக மக்கள் மத்திய அரசுக்கும் பாரத ஒற்றுமைக்கும் என்றும் துணை நிற்போம். ஜெய் ஹிந்த்.


Krishnamoorthy
மே 07, 2025 17:08

ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி பிரச்சினைகள் இருக்கின்றன.


ஆரூர் ரங்
மே 07, 2025 18:35

ஒன்றியம் FEDERAL என்ற சொல்லே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. யூனியன் என்றால் ஒன்றியம் அல்ல. யுனைடெட் என்றால்தான் ஒன்றியம்.


சமீபத்திய செய்தி