உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புத்திறன் அதிகரிப்பு: விமானப்படை துணை தளபதி பெருமிதம்!

இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புத்திறன் அதிகரிப்பு: விமானப்படை துணை தளபதி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நமது வான் பாதுகாப்புத்திறன் அதிகரித்திருப்பது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டது,' என விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பேசியதாவது: கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் மீது இந்திய விமானப்படை 50க்கும் குறைவான ஆயுதங்களை ஏவியதால், மே 10ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நம்மிடம் போர் நிறுத்தம் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n5lk7f4g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாம் எதிர்பார்ப்பது போலவே, வான் பாதுகாப்பு திறனின் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். 1971ம் ஆண்டு நடந்த போரின் போது கூட அழிக்கப்படாத இலக்குகள் அழிக்கப்பட்டன. அந்த அளவிற்கு நாம் அவர்களுக்கு சேதம் விளைவித்தோம். ஒவ்வொரு ஆயுதமும் சரியான இலக்கைத் தாக்குவதை உறுதி செய்வது முழு குழுவின் முயற்சியாகும். பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை விட ஒரு புகைப்படம் பேசிவிடும். முக்கிய பயங்கரவாத தலைவர்களின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இது, பாகிஸ்தான் அரசு, நேரடியாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்பதற்கான சாட்சி. இவ்வாறு ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Artist
ஆக 31, 2025 09:46

பாராளுமன்ற கூட்டுக்குழு ராணுவத்தளபதியிடம் விளக்கம் கேட்கலாம் ..மது அருந்தி நரம்பு தளர்ச்சியால் அவதிப்படும் இளைய சமுதாயத்தை பற்றி கவலை பட்டதுண்டா


ManiMurugan Murugan
ஆக 30, 2025 23:22

அருமை இராணுவத்தின் முப்படைகளின்பாதுகாப்பு திட்டங்கள் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்


முதல் தமிழன்
ஆக 30, 2025 20:08

சொல்றதை பார்த்தா நாம்தான் நம்பர் 1 வல்லரசோ என்று நினைக்க தோன்றுகிறது. தினம் தினம் ஆபரேஷன் சிந்தூர் செய்தி வந்த வண்ணம் உள்ளது. அப்ப பாக்கி பக்கிரிகள் அம்புட்டுதேன். ஜெய்ஹிந்த். வாழ்க வல்லரசு இந்திய பேரரசு. இந்த மாதிரி தினம் தினம் செய்தி வந்து ராகுல்ஜி வயிற்றில் புலி கரைக்குமே நான் நினைக்கிறன் பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் அல்லு வுட்டுட்டு இருப்பானுங்கோ. சாப்பாடு தொண்டையில் இறங்காது. பட்டினி கிடந்து சாகட்டும் பாக்கிகள்.


திகழ்ஓவியன்
ஆக 30, 2025 19:49

சார் டிரம்ப் சொன்ன அந்த 7 விமானம் , போருக்கு முன்னர் இந்தியாவிடம் இருந்த போர் விமானம் எத்தனை , போருக்கு பின்னர் உள்ள விமான எண்ணிக்கை ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்கள்


Artist
ஆக 31, 2025 14:48

வெள்ளை எதுக்கு ? கலர்ல கேளு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை