உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை

சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் விஜய் குமார் மஹதோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மஹதோ, 27. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார்.ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டவர் லைன் பிட்டராக பணியாற்றி வந்தார். சவுதி அரேபியாவில் உள்ளூர் போலீசாருக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், அந்த வழியாக சென்ற இந்திய இளைஞர் விஜய் குமார் மஹதோ மீது குண்டு பாய்ந்தது. பின்னர் உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜய் குமார் மஹதோ உயிரிழந்தார். முன்னதாக, துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த பிறகு, விஜய் குமார் மஹதோ தனது மனைவிக்கு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். அவர் அந்த வாய்ஸ் மெசேஜ்யில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் சிக்கி காயம் அடைந்ததாக கூறியுள்ளார். தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் குமார் மஹதோ உயிரிழந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் மனம் உடைந்தனர். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சவுதி அரேபியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் விஜய் குமார் மஹதோவுக்கு மனைவி தேவி, மகன்கள் ரிஷி குமார் (5), ரோஷன் குமார் (3), அவரது தந்தை சூரியநாராயண் மஹதோ மற்றும் தாயார் சாவித்ரி தேவி ஆகியோர் உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
நவ 01, 2025 22:00

மனித உரிமை ஆர்வலர்கள் அங்கே இல்லவே இல்லையா ?


R S BALA
நவ 01, 2025 20:39

மிக வேதனையான சம்பவம்..


Kumar Kumzi
நவ 01, 2025 15:29

என்னங்கடா இது சவூதி அரேபியாவிலும் சாராய மாடல் சண்டை ஆரம்பிச்சிருச்சா


Kasimani Baskaran
நவ 01, 2025 14:22

கள்ளச்சாராயமா. அக்கிரமாக இல்லை.


Rahim
நவ 01, 2025 12:23

RIP....உரிய இழப்பீடு பெற்றுத்தர இந்திய தூதரகம் துரித முயற்சி எடுக்கவேண்டும்.


A viswanathan
நவ 02, 2025 00:51

அவருடைய குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வாங்கி கொடுப்பதற்கு இந்திய தூதரகம் எல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.அவரது. ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


Haja Kuthubdeen
நவ 01, 2025 12:14

சவூதி அரசு மனிதாபிமானத்துடன் தகுந்த இழப்பீடு அவர் குடும்பத்திற்கு வழங்கனும்.


chennai sivakumar
நவ 01, 2025 11:28

முடிவு எப்படி எல்லாம் வருகிறது


R. SUKUMAR CHEZHIAN
நவ 01, 2025 11:17

வருந்துகிறோம் சவூதி அரேபியா உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஓம் சாந்தி


ஈசன்
நவ 01, 2025 11:10

இளைஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை