உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர் கடத்தினர். அந்த கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின் போர்க்கப்பல், கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக காப்பாற்றியது.சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர், கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் விமானப்படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றியது.இதுகுறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் நேற்று கூறியதாவது: சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் ஈடுபட்டது. அப்போது, ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், கப்பலையும், அதிலிருந்த 17 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர்.இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கப்பல் கடத்தல்?

சோமாலியாவுக்கு கிழக்கே, சர்வதேச கடல் பகுதியில், கடந்த 27ம் தேதி, இலங்கையின் மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டது. இதில், ஆறு பேர் இருந்தனர். இந்த கப்பலை, சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக, அந்நாட்டு அரசுடன், இலங்கை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A1Suresh
ஜன 30, 2024 07:29

புறநானுற்றிலே அவ்வையார் தொண்டைமான் அரசனிடம் தூது சென்று பேசுவது போல ஒரு காட்சி .அதாவது தொண்டைமான் , தகடூறை ஆளும் அதியமான் மீது போர் தொடுக்க ஆயத்தம் செய்கிறான். அவனிடம் செல்லும் அவ்வையார் -"உன்னிடம் உள்ள படைக்கலன்கள் நெய்பூசப்பெற்று, மயிற்பீலி சுட்டப்பெற்று அழகாய் மின்னுகின்றன. அவ்வாறே உனது வீரர்களும் சினிமா கதாநாயகர்கள் போல அழகாய் விளங்குகின்றனர் .ஆனால் அந்த அத்திமானிடமோ படைக்கலன்கள் உடைந்தும், கொல்லனிடம் பழுதுபார்க்கவும் இருக்கின்றன. மேலும் அவனுடைய வீரர்களுக்கு முகத்த்திலும், உடம்பிலும் பல வெட்டுக்கள் பெற்று கொடுரமாக காட்சியளிக்கின்றனர் என்கிறார். அதாவது தொண்டைமானுக்கு போர் அனுபவம் இல்லவே இல்லை. மாறாக அதியமான் பொற்பல புரிந்து வெற்றிக்கனியை சுவைத்தவன். எனவே அவனிடம் போருக்கு சென்றால் தோற்பாய். சமாதானமாகி விடு என்பதே அவ்வையார் சொல்லும் ரகசியம் . இங்கே சீனநாட்டு போர் வீரர்கள் தொண்டைமான் படையினர் போலும் , நமது பாரதத்து வீரர்கள் அதியமானின் வீரர்கள் போலும் போர்பயிற்சிகள் பல பெற்று அனுபவசாலிகளாய் விளங்குகின்றனர் . இதேபோல பல்வேறு போர்களில் பங்குபெற்று, வென்று , வாகை சூடி, உலகில் கீர்த்திமிக்க நாடாக பாரதம் என்றும் விளங்கட்டும் . பாரத் மாதா கீ ஜெய் . அப்பாடல் பின்வருமாறு இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ ரொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே


RAMESH K
ஜன 30, 2024 07:25

இந்திய விமானப் படையிடம் போர் கப்பல் உள்ளது என்பதை இந்த செய்தி தொடர்பாளர் முலம் அறிந்து கொண்டேன்...


NicoleThomson
ஜன 30, 2024 04:53

பாத்துங்க சூதனமா நடந்துக்கோங்க இந்தியா கடற்படை வீரர்களே


Ramesh Sargam
ஜன 30, 2024 00:36

இனி வரும் காலங்களில், இந்தியா, உலகையே காப்பாற்றும் ஒரு நாடாக விளங்கும்.


மேலும் செய்திகள்