வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியா ரஷ்யா அனைத்து நட்புறவுகளும் ஒன்றாக பயணிக்க வேண்டும்
இந்திய கடற்படை மேலும் வெற்றி பெறும்
இந்திய கடற்படைக்கு வாழ்த்துக்கள்
புதுடில்லி: இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., தமால் இந்திய கடற்படையுடன் ஜூலை 1ம் தேதி இணைக்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rwwmmmdk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறப்புகள் என்னென்ன?
* 3,900 டன் எடை, 125 மீ., நீளம் கொண்ட இந்த போர்க்கப்பலில் இந்தியா-ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.* கடல் மற்றும் நிலத்தை குறிவைக்கும் நீண்ட தூர கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட 26 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.* இந்த போர்க்கப்பல் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படை உடன் இணைக்கப்படுகிறது.* இந்த போர்க்கப்பலுக்கு கடவுள்களின் ராஜாவான இந்திரனால் போருக்குப் பயன்படுத்தப்பட்ட புராண வாளைக் குறிக்கும் வகையில், ''தமால்'' என பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது: ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படை உடன் இணைக்கப்பட உள்ளது. ஐ.என்.எஸ்., தமால் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறன்களின் அடையாளமாக இருக்கும்.இந்தியா-ரஷ்யா இடையே உள்ள உறவின் வலிமையை எடுத்துரைக்கும். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில் இணைக்கப்படும் 8வது போர்க்கப்பல் தமால். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா ரஷ்யா அனைத்து நட்புறவுகளும் ஒன்றாக பயணிக்க வேண்டும்
இந்திய கடற்படை மேலும் வெற்றி பெறும்
இந்திய கடற்படைக்கு வாழ்த்துக்கள்