உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., தொழில்நுட்பம் என்ன செய்யும்; இளைஞர்கள் மனநிலை பற்றி கருத்துக்கணிப்பில் தகவல்

ஏ.ஐ., தொழில்நுட்பம் என்ன செய்யும்; இளைஞர்கள் மனநிலை பற்றி கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி: இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏ.ஐ., பூர்த்தி செய்து விடும் என்ற அச்ச உணர்வு இளைஞர்களிடையே எழுந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இண்டியா டுடே மற்றும் சிவோட்டர் நிறுனம் இணைந்து இந்தியர்களிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அந்த வகையில், வேலைவாய்ப்புகளில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது.அதில், வருங்காலத்தில் வேலைவாய்ப்புகளை ஏ.ஐ., பூர்த்தி செய்து விடும் என்று 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், மனிதர்களின் வேலைவாய்ப்புகளை ஏ.ஐ.,யால் பூர்த்தி செய்து விட முடியாது என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் ஏ.ஐ.,யினால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்ச உணர்வு இளைஞர்களிடையே நிலவி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivagiri
பிப் 15, 2025 20:30

NI - Natural Intelligense - க்கு இனிமேல் மதிப்பு இருக்காது போல . . .


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 18:09

AI நிச்சயம் வேலை வாய்ப்புகளை இழக்கச் செய்யும். இதற்கு மாற்று அல்லது தீர்வு என்ன என்று தெரியவில்லை.நன்றாகப் படிக்கிற பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கூட ஒரு வித பயத்தில் தான் இருக்கிறார்கள். Vacancies in labour jobs only available. பாரம் ஏற்றுவதற்கு, சுமப்பதற்கு, இறக்குவதற்கு போன்ற வேலைகளுக்கு மட்டும் ஆட்கள் தேவைப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை