உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w5p6jw4l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி20' உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, தென்ஆப்ரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'சாம்பியன்' பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அங்கிருந்து இன்று (ஜூலை 4) காலை, டில்லி விமான நிலையத்திற்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர், டி20 உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மதியம் மும்பை வரும் வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, திறந்தவெறி பஸ்சில் ஊர்வலமாக (ரோடு ஷோ) செல்ல உள்ளனர். இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், பாராட்டு விழா நடக்கும். பின் பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.V.DESIKACHARI
ஜூலை 05, 2024 10:08

இந்திய வீரர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள் முயற்சி இருந்தாலும் கடைசியில் கடவுள் அருளால் தான் வெற்றி கிடைத்தது என்பதை மறவாதீர்கள் பட்டமும் பணமும் வீர்களுக்கு பணம் நேரமும் நட்டம் பார்வையாளர்களுக்கு அதுதான் கடவுளின் கட்டம் போல். நன்றி கவி ப்ரியன் தேசிகன் சென்னை


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 17:15

இங்க கிரிக்கெட்டில் நாச்சியப்பன் கடை கப்புக்கே மரியாதை.


D.Ambujavalli
ஜூலை 04, 2024 16:10

17 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வென்ற நம் வீரர்களை மனமார பாராட்டுவோம்


ramkumar
ஜூலை 04, 2024 12:51

நம்ப வேலைய பார்ப்போம்


Jayaraman Rangapathy
ஜூலை 04, 2024 11:44

சூப்பர் இந்தியா


Senthoora
ஜூலை 04, 2024 15:18

சொந்த மண்ணில் 50 ஓவர் உலககோப்பையை சமாளிக்க முடியாமல் பிரதமருக்கு ஏமாற்றியவர்கள். ஒரு ஆறுதல் பரிசு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை