உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே பாதுகாப்பு தனியார் வசம் போகுதா ?

ரயில்வே பாதுகாப்பு தனியார் வசம் போகுதா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வே பாதுகாப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ரயில்வே அமைச்சக தரப்பில் கூறப்படுவதாவது:ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்திய ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை தனியார் கைகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விரும்புகிறது. விமான நிலையங்களில் உள்ளதை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில் நிலையங்களிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதிகரிக்கும் கடத்தலை தடுக்க.,

ரயில்கள் வழியாக கடத்தலைத் தடுக்கவும், பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தவும் இந்திய ரயில்வே, சோதனை அடிப்படையில் இரண்டு நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகர், லக்னோ கோமதி நகர் ரயில் நிலையங்கள் உட்பட இரண்டு நிலையங்களில் தனியார் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் வெளியான பிறகு, மற்ற நிலையங்கள் பரிசீலிக்கப்படும். இது வெற்றியடைந்தால், நாட்டின் பிற முக்கிய நிலையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும்.ஏற்கனவே பல வசதிகளை மத்திய அரசு அவுட்சோர்ஸ் செய்துள்ளது. இதில் ஹவுஸ்கீப்பிங், கேட்டரிங் போன்றவை அடங்கும், இதனால் பயணிகள் சிறந்த சேவைகளைப் பெற முடியும் என அரசு நம்புகிறது. உதாரணம் ரயில் நிலையங்கள் முன்பை விட தற்போது சுத்தமாக மாறி வருவதை காண முடிகிறது.

முக்கிய நகரங்கள்

நாள்தோறும் பயணிகள் அதிக வரவு உள்ள நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களான புதுடில்லி, மும்பை, பாட்னா, சூரத், ஆமதாபாத், லக்னோ, போபால், பெங்களூரு, சென்னை, பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய நிலையங்களில் தனியார் பாதுகாப்பு முறை செயல்படுத்தப்படும். தனியார் வசம் ஒப்படைக்கும் போது, பாதுகாப்பு பணியாளர்கள் ஸ்கேனிங் மற்றும் பயணியர்கள் மீதான கவனிப்பு மற்றும் நெரிசலை ஒழுங்குப்படுத்துதல் பணியில் ஈடுபடுவர். நடைமுறைக்கு வரும் போது ரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர்கள் தங்கள் கடமைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Santhakumar Srinivasalu
ஜூலை 22, 2025 20:42

அப்போ வடக்கிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் வருவது தடுக்க படுமா?


Mahendran Puru
ஜூலை 23, 2025 12:16

சுலபமாக அதை கொண்டுவருவது தனியார் வசம் போனால் எளிது என்பதற்காகவே தனியார் மையம். அதுவும் அதானியிடம் கொடுத்துவிட்டால் கொண்டுவருவது மிகவும் சுலபம். அவர் துறைமுகம் மூலம் தானே வருகிறது.


Mario
ஜூலை 22, 2025 18:24

அடுத்தது ரயில்வே மொத்தமும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 22, 2025 17:00

ரயில்கள் என்பது இப்போதெல்லாம் நடமாடும் ஷாப்பிங் மால் ஆகிவிட்டது. ஈரோட்டில் இருந்து பாலக்காடு வருவதற்குள் நூற்றுக்கணக்கான வணிகர்கள் கீ செயின் புத்தகம் காய்கறி பழம் சுண்டல் டீ ஷர்ட் என்று வரிசை கட்டி பயணிகளை இம்சைப்படுத்துகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மகுடமாக திருநங்கைகளின் மிரட்டல்களும் அடாவடிகளும். ஆனால் போலீசும் ரயில் அதிகாரிகளும் மாமூலில் செலுத்தும் அக்கரையில் ஒருசதவீதம் கூட பயணியர் பாதுகாப்பில் செலுத்துவதில்லை. புகார் அளித்தாலும் சமாதானம் செய்கிறார்கள் .


ஆரூர் ரங்
ஜூலை 22, 2025 15:33

அரசு வணிகம் செய்தால் மக்கள் பிச்சையெடுப்பார்கள்.


RAVINDRAN.G
ஜூலை 22, 2025 15:31

முதலில் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்குறானான்னு செக் பண்ணுங்க. திருநங்கைகள் தொந்திரவு சென்னை மின்சார ரயிலில் அதிகமா இருக்கு. இதை செய்தாலே பெரிய விஷயம்


Rajarajan
ஜூலை 22, 2025 15:17

இது ஒரு பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் கருத்து தான். நாட்டின் முக்கிய துறைகளை தவிர, மற்றவற்றை தனியாருக்கு கொடுக்க தான் திரு.மன்மோகன் நினைத்தார். முட்டுக்கட்டை விழுந்தது. அடுத்தது, ரயில்வேயில் பயணசீட்டு தருவது, சுத்தப்படுத்துவது, நிலைய மேலாளர், சரக்கு ஏற்றி இறக்குவது, ரயில்களில் பயணசீட்டு பரிசோதகர் போன்றவற்றை தனியாருக்கு தருவது தான் சரி. தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், சிக்னல் கட்டுப்பாடு, ஓட்டுநர் மற்றும் கார்ட், கட்டண கட்டுப்பாடு போன்றவை அரசிடம் இருக்கவேண்டும். அதேபோல, நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை விற்கவேண்டும் இல்லையேல் இழுத்துமூட வேண்டும். இது அனாவசிய செலவை குறைத்து, நாட்டின் அவசிய தேவை வளர்ச்சிக்கு நிதி வசதியை அளிக்கும்.


V Venkatachalam
ஜூலை 22, 2025 14:31

அப்போ ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து கருப்பு சட்டைக்காரன்கள் ஹிந்தி எழுத்துகளை அழிக்கிறேன் பாருன்னு இங்கிலீஷ் எழுத்துக்களை அழித்தால் அவனுங்களை சுட்டுப்பிடிப்பாய்ங்களா? அப்புடீன்னா நல்ல விஷயம்தான். வாழ்த்துக்கள்.


RAAJ68
ஜூலை 22, 2025 13:54

டைம் பாஸுக்காக லோக்கல் ரயில் நிலையங்களில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் கள்ளக்காதல் ஜோடிகள் இவர்களை விரட்டி அடியுங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உட்கார இடம் இல்லை. தேவையில்லாத ஆட்கள் பெஞ்சுகளில் தூங்கிக் கொண்டுள்ளனர்.


RAAJ68
ஜூலை 22, 2025 13:52

ஆள் நடமாட்டம் இல்லாத பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகள் ஸ்டேஷனுக்கு சம்பந்தமில்லாத வகையில் தள்ளி உள்ளன. ரவுடிகள் பொறுக்கிகள் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு அடைக்கலமாக உள்ளன. ரயில்வே போலீசார் எதையும் கண்டு கொள்வதில்லை. அகலப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகளுக்கு மாற்றாக மூன்று மற்றும் நான்காவது நடைமேடை அமைக்கப்பட்டது போதிய இடம் இல்லாததால் இவைகள் சிறிது தூரம் தள்ளி கட்டப்பட்டன. பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இவை அப்படியே உள்ளன இவைகள் தேவையற்ற நடை மேடைகள் இவற்றை அகற்றுவது நல்லது. குடிகாரர்கள் தீய சக்திகள் சமூக விரோதிகள் இவர்களுக்கு தூங்குவதற்கு உதவுகிறது.


Tamil Inban
ஜூலை 22, 2025 13:21

ஏற்கனவே டீ சமோசா விக்கிறவன் தொந்தரவு தாங்கமுடியல, இதுல இவுனுங்க வேற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை