உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேற லெவல் வேக்வம் கிளீனர்... குட்டியாக உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தார் பீகார் மாணவர்!

வேற லெவல் வேக்வம் கிளீனர்... குட்டியாக உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தார் பீகார் மாணவர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகின் மிகச்சிறிய வேக்வம் கிளீனர் உருவாக்கிய பீகார் மாணவர் தபலா நடமுனி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 23 வயது மாணவர் தபால நடமுனி. இவர் பல்வேறு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது, உலகின் மிகச்சிறிய வேக்வம் கிளீனர் உருவாக்கி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது விரல் நகத்தை விட சிறியது. அதன் குறுகிய அச்சு 0.65 செமீ (0.25 அங்குலம்) உள்ளது. இவர் இதனை உருவாக்க இரண்டு ஆண்டுகள் செலவிட்டுள்ளார். ஏற்கனவே இவர் உருவாக்கிய, வேக்வம் கிளீனர் சாதனத்தை மறுவடிவமைப்பு செய்து, வெறும் 0.65 செ.மீ., அளவுள்ளதாக மாற்றியுள்ளார். 'எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த சிறிய கிளீனரைப் பார்த்து வியந்தனர். ஆசிரியர்கள் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர். இது மிக சிறிய அழகான படைப்பு என்று என்னிடம் கூறினர்' என்று தபால நடமுனி தெரிவித்தார்.வேக்வம் கிளீனரில் நான்கு வோல்ட் அதிர்வு மோட்டார் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய சுழலும் விசிறி, தூசி துகள்களை எளிதில் அகற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

theruvasagan
செப் 17, 2024 13:26

வடக்கன் பானி பூரி பீட வாயன் என்று சொன்ன திருட்டு திராவிடன்சுக்கு இந்த கண்டுபிடிப்பு சமர்ப்பணம்.


சமூக நல விரும்பி
செப் 17, 2024 13:24

திறமை உள்ளவர்களை அரசு ஊக்குவிக்க நினைத்தாலும் அரசியல் வாதிகள் அவர்களை நசுக்கி விவார்கள். அதனால் அன்பர் ஒருவர் இங்கு குறிப்பிட்டது போல முக்கியமாக தினமலர் போல இந்திய பத்திரிக்கைகள் மூலம் இப்படி பட்ட செய்திகளை உலகம் முழுவதும் பரவ செய்தால் இந்திய நாடு உலக அளவில் மேலும் முந்நெருவதொடு மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பதில் ஐய்யம் இல்லை.


vbs manian
செப் 17, 2024 09:47

நாட்டில் கொட்டி கிடக்குது திறமை. வாய்ப்பு இல்லை.


Lion Drsekar
செப் 17, 2024 08:51

பாராட்டுக்கள் இந்த செய்தி அந்த மாநிலத்தில் வந்திருக்குமா என்று தெரியவில்லை ஆனால் நமது தினமலர் உலகம் உழுவதும் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது, மேலும் இது போன்ற சிறுவர்கள் கண்டுபிடிப்புகளை அந்த அந்த அரசு அல்லது ஒன்றிய அரசு பேங்க் லோன் கொடுத்து ஒரு தொழிலதிபராக உருவாக்க வேண்டும், தினமலரில் வந்த செய்தி, ஒரு சிறுவன் விண்வெளிக்கு மிகக்குறைந்த செலவில் கண்டுபிடித்த ஒரு சாதனம், அது அன்றைய செய்தியாகிப்போனது, பிறகு எந்த ஒரு அரசும் அவரைப் பாராட்டி ஊக்குவிக்கவே இல்லை, தினமலர் தயவு செய்து தொழில்துறையினருக்கும் அரசாங்கத்துக்கும் இந்த செய்தியை அனுப்பி, அவர்களையும் ஒரு தொழில் அதிபராக ஆக்கவேண்டும், தினமலருக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்


மோகனசுந்தரம்
செப் 17, 2024 09:34

உமக்கும் ஒன்றிய அரசு என்ற வியாதி பிடித்து விட்டதா.


Nagendran,Erode
செப் 17, 2024 11:08

ஒன்றிய அரசுன்னு சொல்லிட்டு வந்தே மாதரம்னு சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?


முக்கிய வீடியோ