உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: தூதர் பேட்டி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: தூதர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது போன்று உணர்கின்றனர்,'' என அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார்.கனடாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது. இதற்கான பணிகளை இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இதன்படி கடந்த 2019 ம் ஆண்டு கனடாவை விட்டு 625 இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 1997 பேர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்த பட்டியலில், 6,837 இந்தியர்கள் உள்ளதாகவும், இதனால் வெளியேற்றப்படும் இந்தியர்களின் இன்னும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இந்தியர்களை தொடர்ந்து மெக்சிகோவைச் சேர்ந்த 5,170 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 1,734 ர் வெளியேற்றப்பட உள்ளனர்.இந்நிலையில் கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருப்பது போன்ற சூழ்நிலையை உணரவில்லை. ஒரு நாட்டின் தூதருக்கு பாதுகாப்பு தேவைப்படும் சூழல் தான் கனடாவில் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை பிரச்னையாக கனடா பார்க்கக்கூடாது. இது கனடாவின் பிரச்னை. அந்நாட்டைச் சேர்ந்த சிலர் இதனை கிளப்புகின்றனர். உண்மையில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒரு குழு, உறவை பிணைக்கைதியாக வைத்து இருக்கும் சூழ்நிலையில், அவர்களை எப்படி சமாளிக்க முடியும் சட்டம் ஒழுங்கு நிலைமையை எப்படி சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காரணமாக இரு நாட்டு உறவு சீர்குலைந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் பட்நாயக், எந்த உறவையும் தனி நபரால் கெடுக்க முடியாது. ஒட்டுமொத்த சூழ்நிலையும் அப்படி அமைந்தால் மட்டுமே அது நடக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
அக் 20, 2025 22:56

உலகிலேயே கல்வியறிவை பொதுமக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பது இந்திய அரசு தான். இங்கு படித்துவிட்டு, வெளிநாடு சென்று வேலைபார்ப்பவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுக்கு மாதந்தோறும் ஆயிரம் டாலர் வரி கட்டவேண்டும் என்று சட்டம் கொண்டவருவது நல்லது. இதனால் இங்கு படித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்யமுடியவிலையே என்று இந்திய இளைஞர்கள் வருத்தப்பட தேவை இருக்காது. மேலும் இந்தியவரி வருமானமும் கூடும். பாதுகாப்பு இல்லாத நாடுகளுக்கு அனாவசியமாக இந்தியர்கள் செல்ல மாட்டார்கள்.


தாமரை மலர்கிறது
அக் 20, 2025 20:55

கொரோனா சமயத்தில் மேலை நாடுகள் அதிக பணத்தை பிரிண்ட் செய்ததால், சேவை பொருளாதாரத்தை நம்பியுள்ள அவர்கள் விலைவாசி ஏறாமல் தடுக்க, சம்பளத்தை குறைக்க, பெருமளவில் இந்தியர்களை இறக்குமதி செய்தனர். இந்தியர்களால் வெள்ளைக்காரர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இந்தியர்களை அடித்து உதைத்து புரட்டி எடுக்கிறார்கள். மேலும் இதை அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஆளும்கட்சியின் மீது அதிர்ப்தியை ஊக்குவிக்க, இந்தியர்களின் மீது வெறுப்புணர்ச்சியை சமூகவலைதளங்களில் பொய்களை பரப்பி தூண்டிவிடுகிறார்கள்.


Thravisham
அக் 20, 2025 20:21

திராவிட ஆட்சியில் தமிழக மக்களுக்கே பாதுகாப்பில்லை. எங்கும் கொலை எதிலும் கொள்ளை இதுவே திருட்டு மாடல்.மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.


Vasan
அக் 20, 2025 18:12

இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பு இல்லை.


Senthoora
அக் 20, 2025 17:52

இந்தியர்கள் கண்டா மட்டுமல்ல, அமரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் வந்து சட்டவிரோதமாக வேலை செய்வது, பெண்களிடம் அத்துமீறி நடப்பது, வாங்கிசகலில் கிரெடிட் காட், லோன் போட்டு ஏமாற்ற இந்தியாபோவது. இன்னும் பல மோசடி செய்வதால் அந்தநாட்டு மக்களே இந்தியர்களை வெறுப்புணர்வுடன் பாக்கிறாங்க,


V Venkatachalam
அக் 20, 2025 17:38

தூதர் ரொம்ப லேட்டாக சொல்கிறார். இப்பவாவது சொன்னாரே ன்னு ஆறுதல் அடைவோம்.


sankaranarayanan
அக் 20, 2025 17:34

சமீபத்தில் இந்தியா வந்து நமது பிரதமரை சந்தித்த கனடா நாட்டின் வெளியுறவுத்து அமைச்சரிடம் இந்த தகவலை எடுத்து சென்றால் நல்லது அவரே அதை பார்த்துக்கொள்வார்


Priyan Vadanad
அக் 20, 2025 16:55

நீங்கள் சட்ட விரோதமாக கனடாவில் வாழும் இந்தியரை தாய்நாடு போக அறிவுறுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை