உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு

துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல் குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தனர். ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறி வைக்க போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.போர் நீடித்து வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளில் விமான சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது.அதன் முக்கிய கட்டமாக, துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்களின் ஒரு குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து இறங்கினர். விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர்.பின்னர் நிருபர்களிடம் பேசிய விசாகா என்ற பெண்மணி, துபாயில் இருக்கும் போது மிகவும் பயமாக இருந்தது. தற்போது சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டோம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடன் அங்கு (துபாய்) மொத்தம் 580 பேர் இருந்தனர். அனைவரும் வெவ்வேறு விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மார் 03, 2026 21:21

அதில் ஒரு சிலர் தமிழகத்துக்கு வருவார்கள்.


சூர்யா
மார் 03, 2026 20:54

நல்ல வேலை இவர்கள் விமானம் இறங்கியது மும்பையில் .இதுவே சென்னையில் இறங்கி இருந்தால் ஏர்போர்ட்டே அல்லோகலப் பட்டிருக்கும். இவர்களை மீட்டுக் கொண்டு வந்த ரட்சகரே அந்த மாடல் தலைவர்தான் என வாய் கூசாமல் பொய் சொல்லி வந்தவர்களிடமும் பேட்டி வாங்கி இருப்பார்கள். தேர்தல் நேரமாதலால் அலப்பறை ரொம்பவே ஜாஸ்தியாக இருந்திருக்கும். மும்பையில் இறங்கி விட்டார்களே! வட போச்சே!


Palanisamy Sekar
மார் 03, 2026 19:35

தேசீய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் அவர்களும் நமது வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும். நம்ம மோடிஜியும் உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவர்களும் இருக்கும் வரை உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கஷ்டம்ப்படுகின்றார்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற நிலையில் திட்டமிட்டு அவர்களை அங்கிருந்து கொண்டுவரும் அசாத்திய திறமைபடைத்தவர்கள் நமது ஆட்சியாளர்கள். அதனால் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசிப்போர் கவலையை விடுங்கள் நம்ம மோடிஜியின் டீம் திறமையாக செயல்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவார்கள். எள்ளளவும் பயமே வேண்டாம். தைரியமாக இருங்கள்.


நிக்கோல்தாம்சன்
மார் 03, 2026 19:31

எந்த கடையில் அரசி வாங்குற , துபையில் விவேகானந்தர் தெருவில் அரிசி வாங்குறேன்


வில்லிபுத்தூரான்
மார் 03, 2026 16:50

டுப்பாயில் இருந்து பஸ் மூலம் அனைவரையும் மீட்ட பால்டாயில் அரசுக்கு நன்றி


Rathna
மார் 03, 2026 16:50

அரபு நாடுகளில் தமிழக ஊராட்சி பஞ்சாயத்து அமைச்சர்களுக்கு மரியாதை கிடையாது. அவர்களுடன் பேசி இங்கே கூட்டி வரும், அந்த அதிகாரம் மத்திய வெளி உறவுத்துறை செயலர் மற்றும் அமைச்சருக்கு மட்டுமே உண்டு. பெரிய விஷயங்களில் நாட்டின் பிரதமர் தலையீடு நடக்கும். என்ன ஸ்டிக்கர் ஓட்டினாலும், மற்றவர்களை GCC - அரேபிய அதிகாரிகள் மதிப்பதில்லை. மிஞ்சி போனா இலவச டிக்கெட் மட்டுமே வாங்கி தரலாம்.


Sampath
மார் 03, 2026 16:36

வந்தவுடன் அமெரிக்க தூதரகம் முன்பு மறியல். விடியா அரசு அனுமதியுடன். மோடியை கொடும்பாவி எரித்து நன்றி போராடம் . என்ன மனிதர்களோ.. நேரா கராச்சி அனுப்பிவிட வேண்டும்


amsi ramesh
மார் 03, 2026 15:54

மத்திய அரசு முழுமூச்சுடன் களப்பணி செய்து மீட்ட தமிழகம் கொண்டுவரும் ... இங்கு சென்னை வந்தவுடன் விடியல் அரசுக்கு நன்றி சொல்லணும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மார் 03, 2026 15:28

தமிழர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்ப அயராது பாடு பட்ட விடியல் சார் வாழ்க, ஸ்டிக்கர் அடிச்சி ஒட்டியாச்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை