உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் அதிரடி நடவடிக்கை: வறண்ட பாக்., செனாப் நதியின் செயற்கைக்கோள் படம் வெளியீடு

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை: வறண்ட பாக்., செனாப் நதியின் செயற்கைக்கோள் படம் வெளியீடு

புதுடில்லி: சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கருதப்படுகிறது. இவற்றில், கிழக்கே பாயும் மூன்று நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒப்பந்தப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நதிகளில் பாயும் தண்ணீரில் குறைந்த அளவு மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும். பெரிய அளவில் அணைகளைக் கட்டி தடுத்து நிறுத்த கூடாது என்பது சிந்து நதிநீர் ஒப்பந்தம். இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவில் முறிவு ஏற்பட்டது.இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.தற்போது, இந்தியாவின் அதிரடி நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக பாய்ந்த தண்ணீர், தாக்குதலுக்குப் பின் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையால் வறண்ட நதியின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. 'இந்தியாவிடம் சீண்டி பார்த்த பாகிஸ்தானுக்கு இதுவே தக்க பதிலடி' என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

மீனவ நண்பன்
மே 01, 2025 01:37

வழக்கமாக தண்ணீர் திறந்துவிடுவதை பாகிஸ்தானுக்கு தெரிவிப்பது நடைமுறை வழக்கம் அதற்க்கு தகுந்தாற்போல விதைப்பது நாத்து நடுவது செய்வது வழக்கம் . இனி அறிவிக்க போவதில்லை நாத்து நடும்போது தண்ணீர் திறக்காமல் நேரத்தை கடத்தி தேவையில்லாத நேரத்தில் திறந்து விடலாம்


மீனவ நண்பன்
ஏப் 30, 2025 21:09

கம்பியூட்டர் கிராபிக்ஸ்...ரெண்டு நாள் முன்னாடி தண்ணீரை திறந்து விட்டாங்க.


Ramesh Sargam
ஏப் 30, 2025 20:49

இந்தியாவிலிருந்து ஒரு உதவியும் பாகிஸ்தானியர்களுக்கு கிடைக்கக்கூடாது.


Gnana Subramani
ஏப் 30, 2025 19:58

இந்தப் படத்தை வெளியிட்டது யார்


மதுரை வாசு
ஏப் 30, 2025 19:18

சீனாப் நதியின் குறுக்கே இந்தியாவில் 3 பெரிய அணைகள் உள்ளன சலால், பக்லிஹார் & துல் ஹஸ்தி. இவற்றில் 320மில்லொயன் கனமீட்டர் நீர்பை தேக்கி வைக்கமுடியும். மேலும் இவற்றில் முறையே 690மெகாவாட், 900 மெகாவாட் & 390 மெகாவாட் என மொத்தமாக 1980 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இவைபோக ராட்டில் அணை 650 மெகாவாட் & பாகல்துல் அணைகள் கட்டப்பட்டு வருகிறன. மேலும் 2 அணைகள் குரு & கிஷ்ட்வர் கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டியைதாண்டினால் என்ன இருக்கிறது, நடக்கிறது என்பது எதுவுமே தெரியாத அடிமைகளுக்கு ஒரு.முக்கிய செய்தி.... சினாப் நதியை ஜம்மு & பஞ்சாபில் ஓடும் ராவி.நதியை இணைக்க பல கால்வாய்கள் உள்ளன. அதன்.மூலம் சினாப் நதி நீரைராவி நதிக்கும், அதன்.மூலம் பீயாஸ் & சட்லஜ் நதிக்கும் திருப்பி விடமுடியும்.


Gokul Krishnan
ஏப் 30, 2025 18:24

இது நம்புகிற மாதிரியா இருக்கு! ஒரே வாரத்தில் ஆறு வற்றி வறண்டு விட்டதா?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 30, 2025 18:15

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி (Hold) வைத்துள்ளார்களேயன்றி ரத்து (Cancel) செய்யவில்லை.....அப்படியே தடுத்திருந்தாலும் வற்றாத ஜீவநதியாய் ஓடும் சிந்து நதி ஒரு வாரத்திற்குள் எப்படி வறண்டு போகும்.....!!!


MUTHU
ஏப் 30, 2025 18:14

இனிமேல் தான் பல்லில்லா பாம்பு அதுதான் ஐக்கிய நாடுகள் சபை உக்கிரமாய் சீற ஆரம்பிக்கும்.


kamal 00
ஏப் 30, 2025 18:08

பொய் செய்தி.... அப்போ அந்த தண்ணீர் எங்கே போனது? அடிச்சு விடுங்க


venugopal s
ஏப் 30, 2025 18:07

சங்கிகள் எப்போதும் மூளையைக் கழற்றி வைத்து விட்டு சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!


சமீபத்திய செய்தி