உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்

உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: 'தனது வளமான பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்தியா பங்களிப்பு செய்தால் மட்டுமே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று உலகம் நம்புகிறது. அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை,' என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், இன்று 'இந்து சேவா மஹோத்சவ்' துவக்க விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:இந்தியா தனது சிறுபான்மையினரின் பிரச்னைகளைத் இருக்கும்படி பிற நாடுகளால் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் நிலைமையை நாங்கள் காண்கிறோம்.உலக அமைதி குறித்து பேசி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி நடக்கிறது.உலக அமைதி குறித்து பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் எங்கும் போர்கள் நின்றபாடில்லை.நம் நாட்டில் சிறுபான்மையினரைப் பற்றி நாங்கள் அடிக்கடி கவலைப்படுகிறோம், அதே நேரத்தில் சிறுபான்மையினர், வெளிநாடுகளில் என்ன மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.இந்தியா பங்கு வகிக்காமல் உலக அமைதி சாத்தியமில்லை என்று நம் நாட்டிற்கு வெளியே நிறைய பேர் நினைக்கிறார்கள். இந்தியாவும் அதன் வளமான பாரம்பரியமும் மட்டுமே இதை செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 3,000 ஆண்டுகளாக இது நிரூபிக்கப்பட்டு வருகிறது. உலகின் இந்தத் தேவையை நிறைவேற்றுவது எங்கள் பொறுப்பு.இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saleem
டிச 21, 2024 05:42

முதலில் மணிப்பூரில் அமைதியை உருவாக்கட்டும் பிறகு உலக நாடுகளுக்கு செல்லலாம் நீ


venugopal s
டிச 20, 2024 17:45

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறானாம்!


அப்பாவி
டிச 20, 2024 07:49

மணிபப்பூரில் நாட்டிட்டாங்க. உலகம்தான் பாக்கி.


Anonymous
டிச 20, 2024 09:36

மணிப்பூரின் இன்றைய நிலமைக்கு அடிக்கல் நாட்டி, வளர்த்த அருமை பெருமை எல்லாம் உங்க காங்கிரஸையே சாரும், யாரும் அதில் பங்கு கேட்பதற்கு இல்லை.


naranam
டிச 20, 2024 03:22

ஐயோ போதும் இந்தப் புலம்பல். முதலில் நாடாளுமன்றத்தில் அமைதியை நிலைநாட்ட முடியுமா என்று பாருங்கள்.


Oviya Vijay
டிச 19, 2024 22:34

பர்ஸ்ட் இந்தியாவுல அமைதி நிலவணும்னா அதுக்கு மொதல்ல ஆர்எஸ்எஸ்-ஸ இழுத்து மூடணும்...


hari
டிச 19, 2024 23:05

உன் திருட்டு திராவிடத்தை ஒழித்தால் உன் தலைமுறை நிம்மதியாக வாழும்


Farmer
டிச 19, 2024 23:07

well said


Bala
டிச 20, 2024 05:30

RSS இந்தியாவில் இருப்பதால்தான் நீயெல்லாம் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறாய். மற்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமையை எண்ணிப்பார். அப்பொழுது புரியும் இந்திய திருநாட்டின் அருமை பெருமைகள்.


Anonymous
டிச 20, 2024 09:34

ஆமா ஆமா, உலகம் பூரா கெடு கெட்ட த்ராவீடியம் பரவனும், அது தான் ஒரே வழி


சமீபத்திய செய்தி