உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்; கணித்துச் சொன்னது உலக வங்கி!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்; கணித்துச் சொன்னது உலக வங்கி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்” என உலக வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கிறது.வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம். வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும்.இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்த 50% வரிகள் வரும் ஆண்டில் நாட்டிற்கு தாக்கங்களை ஏற்படுத்தும். 2026-27ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, குறிப்பாக விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற ஊதிய வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளன.தெற்காசியாவின் வளர்ச்சி 2025ம் ஆண்டில் 6.6 சதவீதத்தில் இருந்து, 2026ம் ஆண்டில் 5.8 சதவீதமாக குறையும். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Narayanan Muthu
அக் 07, 2025 20:23

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகுதா என்ன. ஆட்சி மாற்றம் இல்லாமல் பிஜேபி ஆட்சியில் இருக்கும் வரை "வரும் ஆனா வராது" என்பததுதான் நிதர்சனம்.


R. SUKUMAR CHEZHIAN
அக் 07, 2025 20:14

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி வருத்தம் அளிபதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் இதற்கு அதிகபடியான கடன் வாங்குவது ஊழல் புதிதாக முதலீடு செய்பவர்கள் குறைந்து வருவது அல்லது தயங்குவது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் வளச்சி நோக்கி பயணிக்கலாம் இல்லை என்றால் கடன் வங்கியே தமிழகம் திவாலாகும். திராவிட கும்பல்களை நினைத்தாலே பயமாக உள்ளது இவர்களால் தமிழகம் பட்டது போதும்.


Venugopal S
அக் 07, 2025 19:35

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பதினோரு சதவீதத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் ஆறு சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடைய முடியும்! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தமிழக பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே உள்ளது!


ஆரூர் ரங்
அக் 07, 2025 19:59

கோபுரத்தை தாங்கும் பொம்மை டாஸ்மாக்நாடு


தாமரை மலர்கிறது
அக் 07, 2025 19:26

தங்கத்தின் விலையை பார்க்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி பதினைந்து சதவீதம் இருக்கும்.


Field Marshal
அக் 07, 2025 19:18

இயற்கை சீரழிவுகள் ..புது புது சண்டைகள் எப்போ வரும் என்று தெரியாத நிலையில் ஏர்கண்டிஷன் ரூம்களில் அமர்ந்து கொண்டு பங்குச்சந்தைக்கு சாதகமான அல்லது பாதகமான புள்ளி விவரங்களை அள்ளித்தெளித்து பெரிய நிதிநிறுவனங்களின் லாபத்துக்காக வெளிடுகிறார்களோ என்று சந்தேகம்


Balasubramanian
அக் 07, 2025 17:56

உலகத்துக்கு புரியுது! பாராளுமன்ற எதிர் கட்சி தலைவருக்கும், நம்ம முதல்வருக்கும் புரிய ஏன் மாட்டேங்குது, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி?


Ganesh
அக் 07, 2025 19:47

டிரம்ப் க்கும் தெரிய மாட்டேங்குது..."Dead economy " ன்னு கூசாம பொய் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கார்...


முக்கிய வீடியோ