உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல்; இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் இதோ!

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல்; இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ராணுவம், ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் என்ற ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கென முப்படை தளபதிகளை சந்தித்த பிரதமர் மோடி, தாக்குதல் நேரம், இலக்கு ஆகியவற்றை நீங்களே முடிவு செய்யலாம் என்று முழு சுதந்திரம் அளித்தார்.இதனால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலை உள்ளது.இந்நிலையில், இந்திய ராணுவம், ரஷ்யாவில் இருந்து அவசர கொள்முதல் அனுமதியின் கீழ், இக்லா எஸ் என்ற தனிச்சிறப்பு வாய்ந்த ஏவுகணைகளை 260 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது.சிறப்புகள் இது தான்!இந்த ஏவுகணைகள், குறுகிய தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தவை. அதாவது, 6 கிலோமீட்டர் என்ற குறுகிய தொலைவுக்குள் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்தியாவுக்கு மிகவும் வசதியானவை.இவை, அதிகபட்சம் 3.5 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடியவை. இவற்றை ஒரே ஒரு தனி நபர் தோளில் வைத்து இலக்கு மீது ஏவி விட முடியும்.ஒரு ராணுவ வீரரே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சுமந்தும் சென்று விடலாம். விண்வெளியில் இருக்கும் இலக்கு நோக்கி எளிதில் ஏவி தாக்குதல் நடத்த முடியும். விண்வெளியில் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானம், டிரோன், ஹெலிகாப்டர் போன்றவற்றை குறி பார்த்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற 'இன்ப்ரா ரெட் ஹோமிங்' வசதி இதில் உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்த ஏவுகணையை, ஒரு முறை இலக்கு மீது குறி வைத்து ஏவி விட்டால் போதும்; குறி வைக்கப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டர் அல்லது டிரோனின் இன்ஜின் வெப்பத்தை உணர்ந்து பின்தொடர்ந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.இந்திய ராணுவத்திடம் ஏற்கனவே இக்லா ஏவுகணைகள் உள்ளன. அவற்றில் நவீன வசதிகள் சேர்க்கப்பட்டது தான் இந்த இக்லா எஸ் என்ற மாடல் என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.பழைய இக்லா ஏவுகணைகளும், தற்போதைய தேவைக்கு தகுந்தபடி இந்திய நிறுவனம் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.போர் எந்த நேரத்திலும் துவங்கலாம் என்ற நிலையில் இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் எல்லையோர முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Arinyar Annamalai
மே 09, 2025 17:49

ஸ்டிங்கர் ஏவுகணை போன்றதா?


Ram
மே 09, 2025 06:27

வெறும் தீவிரவாதத்தை போதிக்கும் கண்ணனுக்கு கண் பல்லுக்கு பல்


Kasimani Baskaran
மே 06, 2025 04:03

சீன/வடகொரியா உற்பத்தியாக இல்லாமல் இருந்தால் நல்லது.


thehindu
மே 06, 2025 00:05

பயத்தில் திளைக்கும் அரசு


Venkataraman
மே 05, 2025 23:25

இந்த மாதிரியான ரகசிய தகவல்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. நமது நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களின் செய்திகளையும் பாகிஸ்தான் கண்காணித்து வருகிறது. இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்


Sri Sri
மே 05, 2025 22:36

பாமரன் போன்ற சீன பன்றிஸ்தான் ஆதரவு கருத்துக்கள் தேவை இல்லை


Karthik
மே 05, 2025 21:50

நமது பலம் எதில் உள்ளது எங்கு உள்ளது எப்படி உள்ளது எவ்வளவு உள்ளது என்பதை எதிரிக்கு சொல்லாமல் இருப்பதே நமது மிகப்பெரிய பலம்.


பாமரன்
மே 05, 2025 21:36

ஆத்மநிர்பர்பர்புர்புர் திட்டத்தில் என்னதான் பண்றாங்களாம்... 2047ல் கருப்பு பூச்சாண்டி ஒழிச்சிட்டு மருத எய்ம்ஸ் கட்டி வல்லரசு ஆகப்போறோன்னு சொல்றோம்... ஆனால் ஆயுத கணக்குல ஒலகத்தில் நாலாவது அதிக செலவும் பண்ணிட்டும் எவன் பொண்டாட்டியோ நல்லாயிருக்குன்னு சிலாகித்து கட்டுரை எழுதுதல் தான் சாதன இதுவரை... ஜெய்ஹோ ஜெய்ஹோ... எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான் ஸ்வாஹா...ஜெய்ஹோ...


பெரிய ராசு
மே 05, 2025 21:52

ஆசிரியர் உண்மையிலே நீங்கள் இந்தியாவை நேசித்தல் இந்தமாதிரி தேசத்துரோகிகள் பாக்கித்தானின் அடிவருடிகள் கேடுகெட்ட கொங்கிரஸின் சொம்புதூக்கி எட்டப்பன்கள் கருத்துகளை பிரசுரிக்கவேண்டாம் ..


Ravi Manickam
மே 06, 2025 02:31

பாமரன்… உனக்கு திமுக பாணியில் பதிலில் சொல்லவேண்டுமென்றால், உன்னையெல்லம் பெத்தாங்களா இல்ல கக்குனாங்களா? அறிவுகெட்ட முண்டமே சில வகை ஆயுதங்களை நாம் தயாரிக்கும் உரிமம் இல்லை என்று கூட தெரியாத பாமரன் தான் நீ.


Barakat Ali
மே 05, 2025 21:16

சுத்தமா துடைத்து விடவேண்டும் .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை