உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின அணிவகுப்பில் புதுசு! களத்திற்கு வரும் பிரளய் ஏவுகணை

குடியரசு தின அணிவகுப்பில் புதுசு! களத்திற்கு வரும் பிரளய் ஏவுகணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரளய் ஏவுகணை குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது.ஜன.26ல் நடக்கும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது தலைநகர் புதுடில்லியில் ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நடக்கும் அணிவகுப்பில் தரையில் உள்ள இலக்குகளை குறி வைத்து துல்லியமாக தாக்கும் 'பிரளய்' ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. பிரித்வி ஏவுகணையை முன்மாதிரியாக கொண்டு பிரளய் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 350 கி.மீ. முதல் 500 கி.மீ., தூரம் வரை உள்ள இலக்கை தாக்கக்கூடியது. கிட்டத்தட்ட 500 கிலோ முதல் 1000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடையது. சீனா, பாக்., எல்லைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ள பிரளய், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பயன்படுத்தப்படும். பிரளய் ஏவுகணை தவிர்த்து, ஆரூத்ரா ரேடார், ஜோராவர் பீரங்கி உள்ளிட்டவையும் குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படுகின்றன. சி 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ், சி295, சி17 குளோப்மாஸ்டர், பி81, எம்ஐஜி29 உள்ளிட்ட போர் விமானங்களும் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sivakumar Thappali Krishnamoorthy
ஜன 25, 2025 10:37

இந்த குடியரசு தினம் ஏனோ மனம் வலிக்கின்றது ..இந்தியா ஹிந்துக்களின் நாடு என்று பிரகணபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மத பிரச்சனை எழ ஆரம்பித்து விட்டது, ஒரு சில அமைப்புகளுக்கு பயம் அரைவே இல்லை .சாதாரண பொது மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். மத்திய உடனடியாக தலையிட்டு தரமான தீர்வு காண வேண்டும் .


Barakat Ali
ஜன 25, 2025 09:00

நவாஸ் கனி போன்றவர்களையும் பாதுகாக்கும் பாதுகாப்புத் துறை .... நன்றி .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை