உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதம்: மத்திய அரசு

இந்தியா ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதம்: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2024 -25 ல் 3வது காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி., 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. இது இரண்டாவது காலாண்டை விட அதிகம் ஆகும்.இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறி்க்கையில் கூறியுள்ளதாவது: 2024 - 25 நிதியாண்டின் 3வது காலாண்டில்( 2024 அக்.,- டிச.,) இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதம் ஆக இருந்தது. உற்பத்தி மற்றும் சுரங்கத்துறைகளில் எதிர்பார்த்த அளவு செயல்பாடு இல்லாத காரணத்தினால் ஜி.டி.பி., வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது.இருப்பினும், 2024 -25 ம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில்( ஜூலை - செப்.,) ஜி.டி.பி., வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது.நடப்பு காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 20:43

கெக்கேபிக்கே என்று சிரிக்கும் திமுக/காங்கிரஸ் அடிமைகள் கவனிக்கவும்.. எதிர்பார்த்த ஜிடிபி இல்லை என்பது உண்மையே.. பல நாடுகள் நிலை இன்னமும் மோசம்.. கடந்த வாரம் புதிய முதலீடுகளுக்கு ஏற்ற நாடு இந்தியாதான் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. நாடு முன்னேறித் தொலையட்டும். ஆனா அது மோடி / பிஜேபி காலத்துல மட்டும் நடந்து அவனுங்களுக்கு பேரு போயிடக்கூடாது


ஆரூர் ரங்
பிப் 28, 2025 20:34

இஸ்ரேல் உக்ரைன் போர் காரணமாக உலகத்தின் எல்லா நாடுகளின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அளவுக்கு வளர்ச்சியுள்ள நாடுகள் குறைவு. இயன்ற அளவு உள்நாட்டுப் பொருட்களை வாங்கி ஆதரித்தால் உலகை வெல்லலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 20:02

மத்திய அரசு வெளியிடும் ஜிடிபி யில் மாநில அரசுகளின் பங்கு மாநில வாரியாக எத்தனை சதவிகிதம், குறிப்பாக முன்னேறிய மாநிலமான தமிழகத்தின் பங்களிப்பு என்னன்னு தெரியணும் .....


Bye Pass
பிப் 28, 2025 19:37

டாஸ்மாக் மற்றும் 200 க்கு மாரடிக்கிற பருப்புகளுக்கு இதெல்லாம் தேவையில்லை


Narayanan Muthu
பிப் 28, 2025 19:25

அடிச்சு விடு அடிச்சு விடு. விவரம் கேட்டா தரவுகள் அரசு வசம் இல்லைன்னு கைவிரிக்கவேண்டியதுதானே. NDA NO DATA Available அரசுதானே.


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
பிப் 28, 2025 19:44

நாராயணா உனக்கும் பொருளாதாரத்துக்கும் கொஞ்சமாவது ஞானப்பிராப்தி இருக்கா? எனவே நீ அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு...


Sakthi,sivagangai
பிப் 28, 2025 20:01

ஏலே அறிவாலய அடிமையே பொருளாதார வளர்ச்சி பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா நீதான் அடிச்சு விடுற உனக்கு வெட்கமாக இல்லையா


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 28, 2025 20:24

நாராயணா அறிவாலய அடிமையே உனக்கும் பொருளாதாரத்துக்கும் என்ன சம்பந்தம்


Bye Pass
பிப் 28, 2025 23:27

200 உப்பி தானே.. இப்போ உங்க அசைன்மென்ட் சீமான் சமாச்சாரம் தானே ..தடம் புரண்டு போறீங்களே


அப்பாவி
பிப் 28, 2025 18:24

7 சதவீதம், 8 சதவீதம், 9 சதவீதம்னு ஆளாளுக்கு ஜல்லியடிச்சாங்க.


SUBBU,MADURAI
பிப் 28, 2025 19:26

மிஸ்டர் அப்புசாமி தங்களுக்கு நம் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரிந்தால் தயவுசெய்து அந்த தரவுகளை முழுவதுமாக வெளிப்படுத்துங்கள் சும்மா போகிற போக்கில் எதையாவது தவறாக சொல்லாதீர்கள். 6.2% looks very good number when other major economies are in recession.


Srinivasan Krishnamoorthy
பிப் 28, 2025 19:28

please note that india has highest gdp growth in the world, difficult to comprehend for dmk ups


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை