உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக எலான் மஸ்க்குடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக இருநாட்டு தலைவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ohnglfg7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அரசின் திறனாய்வுத் துறையை (DOGE) நிர்வகித்து வருபவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். இந்த நிலையில், எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசினார். அப்போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், எலான் மஸ்க்கின் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான முயற்சியை ஈடுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், 'வாஷிங்டனில் நடந்த சந்திப்பின் போது பேசியது உள்பட பல விவகாரங்கள் பற்றி எலான் மஸ்க்குடன் பேசினேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமை உருவாக்குதலில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்தத் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஏப் 19, 2025 10:24

எலான் மஸ்க் குக்கு ஹிந்தியும் தெரியாது குஜராத்தியும் தெரியாதே,அப்புறம் எப்படி?


பல்லவி
ஏப் 19, 2025 05:30

சனாதனம் என்பது இருந்திருந்தால் தமிழர்கள் படித்து இருக்க மாட்டார்கள், கர்ம வீரர் காமராஜர் தலைவர் அவர்கள் உருவாக்கிய மதிய உணவுடன் கூடிய பள்ளி கல்வியால் தான் இன்று தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.


Rasheel
ஏப் 18, 2025 18:45

ஸ்டார்லிங்க், நாட்டின் மலை பகுதிகளில் இணைய தொடர்பை உண்டாக்க உள்ளார்கள். டெஸ்லா EV வண்டிக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க தயாராக இருக்கிறார்கள். இவை இரண்டும் நல்ல உயர்தர வேலை வாய்ப்பை நாட்டில் உருவாக்க உள்ளது.


Rajkumar
ஏப் 18, 2025 17:15

"ஸ்டார்லிங்க்" தொலைதொடர்பு கண்ட்ரோல் அறை இந்தியாவில் இருக்கவேண்டும். டெஸ்லா கார் பாகங்கள் உற்பத்தி 50% உள்நாட்டில் நடக்கவேண்டும். ஏற்றுக்கொள்ள ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார், காரணம் சொந்த நாட்டில் அவ்வளவு எதிர்ப்பாளர்கள் உள்ளனர்.


Rajkumar
ஏப் 18, 2025 17:15

"ஸ்டார்லிங்க்" தொலைதொடர்பு கண்ட்ரோல் அறை இந்தியாவில் இருக்கவேண்டும். டெஸ்லா கார் பாகங்கள் உற்பத்தி 50% உள்நாட்டில் நடக்கவேண்டும். ஏற்றுக்கொள்ள ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார், காரணம் சொந்த நாட்டில் அவ்வளவு எதிர்ப்பாளர்கள் உள்ளனர்.


karupanasamy
ஏப் 18, 2025 15:57

நீ மோளக்காரனை ஊதியே சாவது என்று முடிவு செய்துவிட்டாய் உன் வாய் நீ ஊது.


karupanasamy
ஏப் 18, 2025 17:01

நீ மோளக்காரனை ஊதியே சாவது என்று முடிவு செய்துவிட்டாய் உன் வாய் நீ ஊது. இது ஆபாச திமுக ஊ பீ சுக்கு பதில் பதிவு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 18, 2025 15:45

எலான் மஸ்க் வரிச்சலுகை எதிர்பார்த்தால் கொடுங்கள் .... தவறில்லை .... இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியம் ...... கிம்ச்சை மன்னர் சப்பான், துபை, அமெரிக்கா போயும் சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இல்ல ..... உங்களால் மட்டுமே முடியும் .....


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 18, 2025 15:09

அடுத்தமுறையும் மோடிஜி தான் பிரதமர் ஆக வேண்டும்


Thetamilan
ஏப் 18, 2025 14:32

அந்நியர்களுக்கு நாட்டை அடகுவைத்துவிட்ட இந்துமதவாத கொத்தடிமைகள்


Thetelungan, Coimbatore
ஏப் 18, 2025 15:40

உலகமெங்கும் கூட்டமைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல்லும் தலைவர் மோடி இந்து மதம் என்பதில் பெருமை கொள்வோம்.


சமீபத்திய செய்தி