உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்டிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vtqndf8w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நவ.,30ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக விலகிய நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அணி விபரம்;கேஎல் ராகுல் (கேப்டன்)ரோகித் ஷர்மாவிராட் கோலிஜெய்ஸ்வால்திலக் வர்மாரிஷப் பன்ட் வாஷிங்டன் சுந்தர்ரவீந்திர ஜடேஜாகுல்தீப் யாதவ்நிதிஷ்குமார் ரெட்டிஹர்ஷித் ரானாருதுராஜ் கெயிக்வாட்பிரசித் கிருஷ்ணாஅர்ஷ்தீப் சிங்துருவ் ஜூரேல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
நவ 23, 2025 20:15

இதில் பாதி முதியவர்கள். அனுபவம் இல்லாத இளம் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய பிச்சில் இவர்கள் கூடை கூடையாய் ரன் எடுத்து இன்னும் 10 ஆண்டுகள் விளையாடி இளைஞர்களுக்கும் வழி விடாமல் அவர்களையும் கிழவர்கள் ஆக்கி விடுவார்கள். இந்திய கிரிக்கெட் சங்கத்தை மத்திய அரசு உடன் மாற்ற வேண்டும். அப்போதுதான் விருப்பு வெறுப்பற்ற வீரர்கள் தேர்வு நடக்கும்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை