உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?

வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்க இருந்தது. இச்சுற்றுப்பயணம் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி, ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து, மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க திட்டமிட்டிருந்தது. ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த இருநாடுகளும் முன்பே முடிவு செய்திருந்தன.இத்தொடர்களை ஒளிபரப்பு செய்வதற்கான ஏலம் ஜூலை 7, 10 தேதிளில் நடக்க இருந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடீரென நிறுத்தி வைத்தது. இதற்கிடையே வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சி கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் விழ துவங்கியது. வர்த்தகம் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருநாட்டு உறவில் பாதிப்பு நிலவி வரும் நிலையில், மத்திய அரசுக்கும், இந்திய அணியை வங்கதேசம் அனுப்ப உடன்பாடில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.இந்திய அணி, வங்கதேசம் செல்வதில் சிக்கல் நிலவி வருவதால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒளிபரப்பு உரிமம் தொடர்பான ஏலத்தை நிறுத்தி வைத்தது. இதனால், ஆகஸ்டில் நடைபெற உள்ள இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V RAMASWAMY
ஜூலை 04, 2025 19:21

இந்தியர்களை வெறுத்து, தீங்கு விளைவித்து, தீவிர வாதம் செய்யும் நாடுகளுக்கு நாம் செல்வதோ, அவர்களை இங்கு வரவழைப்பத்தோ அறவே தவிர்க்கவேண்டும் .


D Natarajan
ஜூலை 04, 2025 17:48

தேவையற்ற தொடர் . இந்தியா கிரிக்கெட் விளையாட ஹிந்து எதிர்ப்பு நாடான பங்களா தேஷ் செல்ல வேண்டாம்


Kulandai kannan
ஜூலை 04, 2025 12:41

வங்கதேசத்தை ஆஃப் கான் போல் மாற்றவேண்டும் என்ற கோஷம் கேட்கிறது. பிறகு அங்கு இந்துக்கள் வசிப்பது இயலாத காரியம். எனவே, வங்க தேசத்திலும் மேற்கு வங்கத்திலும் மத அடிப்படையில் மக்கள் பரிமாற்றம் நடைபெறுவதுதான் ஒரே தீர்வு.


K Veerappan
ஜூலை 04, 2025 12:39

சீனா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இந்தியாவுக்கு எதிராக அணி சேர்ந்து எல்லா வழிகளிலும் இடையூறு செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது பங்களாதேஷ் உடன் கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியம் இல்லை.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 13:07

சரியாக கூறினீர்கள். ஆம், இந்தியா, வங்கதேசம் சென்று கிரிக்கெட் விளையாடுவது, ஏன், வங்கதேசத்துக்கு எதற்காகவும் செல்லக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை